ஜமியத்துல உலமா சபை, முஸ்லிம் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் நபர்கள் தொடர்பில் காவற்துறையினருக்கு அல்லது தமது அமைப்புக்கு தகவல் கொடுக்குமாறு, ஜமியத்துல உலமா சபை, முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த சபையின் ஊடக பேச்சாளார் மௌலவி ஃபாதீல் ஃபாருக், எமது செய்தி பிரிவிடம் இதனை தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் தற்கொலை குண்டுதாரிகள் இருப்பதாக அங்குள்ள முஸ்லிம் மக்கள் வழங்கிய தகவலை அடுத்தே, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைப்பை மேற்கொள்ள முடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாவலப்பிட்டியில் தலைமறைவாகியிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும், பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமையவே கைது செய்யப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb