சுற்றிவளைப்பு தேடுதலில் 5 இந்தியர்கள் உட்பட 12 பேர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலில் விசா இன்றி தங்கியிருந்த 5 இந்தியர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட 12 பேரை இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் துப்பாக்கி ரவவைகள் மற்றும் பெரும் திரளான கணணிகள் இறுவெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து காத்தான்குடி பிரதேசத்தில் கடற்கரை வீதி தொடக்கம் ஒரு பகுதியை 600 பேர் கொண்ட இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான இன்று அதிகாலை தொடக்கம் சுற்றிவளைத்து பாரிய தேடுதல் வேட்டையினை நடாத்தி வருகின்றனர்.

இவ் சுற்றிவளைப்பு பகுதிக்கு வெளியில் இருந்தே அங்கிருந்து வெளியே ஒருவரையும் செல்ல விடாமல் வீடுவீடாக சோதனை நடாத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் விசா இன்றி தங்கியிருந்த 5 இந்திய நாட்டவர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட 12 பேரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதுடன் கணணிகள் மற்றும் மதப்பிரச்சார இறுவெட்டுக்கள் ஒரு தொகையினை இராணுவத்தினர் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Author: theneeweb