அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை

அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று “இலங்கையை பாதுகாப்போம்” என்ற அமைப்பின் தலைவர் பாஹியங்கல ஆனந்த சகார தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் தலைமையில் பிக்குகள் சிலர் இன்று மல்வத்து மஹாவிகாரைக்கு சென்று மஹாநாயக்கர் மற்றும் அனுநாயக்கர்களை சந்தித்திருந்தனர்.

இதன்போது பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து யோசனைகளை அவர்கள் கையளித்தனர்.

இதற்கிடையில், நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என தேசிய அமைப்புக்களுக்கான ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

அந்த ஒன்றியத்தின் பிரதிநிதி முருத்தெட்வே ஆனந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb