சாகிர் நாயக்கின் Peace TV இலங்கையில் இலங்கையில் தடை

இஸ்லாமிய மதப் போதகரான சாகிர் நாயக்கின் தொலைக்காட்சி அலைவரிசையான Peace TV இலங்கையில் கேபள் தொலைக்காட்சி அலைவரிசையை வழங்கும் இரண்டு நிறுவனங்கள் தடை செய்துள்ளன.

ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொலைக்காட்சி அலைவரிசை ஏற்கனவே இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த தொலைக்காட்சி அலைவரிசை இலங்கையின் பிரதான கேபள் தொலைக்காட்சி அலைவரிசை வழங்குனர்களால் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் வௌியிடப்படவில்லை.

சாகிர் நாயக்கின் தொலைக்காட்சி அலைவரிசை பயங்கரவாதத்தை போதிப்பதாக குற்றம்சுமத்தப்பட்டு Peace TV ஐ தடை செய்ய இந்திய ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தது.

Share:

Author: theneeweb