பயணிகளின்றி காட்சி தரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்…!

இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாளாந்தம் சுமார் 7 ஆயிரம் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர் எனவும், ஆனால் தற்போது 2 ஆயிரத்திற்கும் குறைவான பயணிகளே வருகை தருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்கள் குறித்து வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்கு அச்சம் கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb