தமிழ் மொழியில் பெயர் தொடர்பில் சீனத் தூதரகத்துக்கு மனோ கடிதம்

புத்தளத்தில் சீன நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டு வரும் கழிவு முகாமைத்துவ மையத்திற்கு தமிழ் மொழியிலான பெயரையும் உள்ளடக்க வேண்டும் என்று அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார்.

இது  தொடர்பில் கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்துக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கழிவு முகாமைத்துவ மையத்தின் பெயர் பலகையில், சிங்கள, சீனா மற்றும் ஆங்கில மொழிகளில் பெயர் எழுதப்பட்டிருந்த போதும், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் சமுக வலைத்தளங்களின் ஊடாக விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் தாம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளார்.

Share:

Author: theneeweb