கொழும்பில் பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என கோரிக்கை

கொழும்பில் உள்ள அனைத்து பாடசாலைகளை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை விசேட சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்படும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, கொழும்பில் உள்ள பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் நாளை ஒரு மணிக்கு பின்னர் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர சாரதிகளுக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், நாட்டில் உள்ள எந்த ஒரு பாடசாலைகளுக்கு அருகிலும் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு வரும் அலுவலக வாகனங்கள் மற்றும் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்துவதற்கு வேறான, வாகன தரிப்பிடங்கள் மற்றும் மைதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதகாவும் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb