கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவரும் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு பேரையும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்லுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கச்சென்ற பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து அரச வாகனத்தை தடுத்து நிறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு பேரையும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்லுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி கண்;டாவளைப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சேவைகளை வழங்கும் பொருட்டு கண்டாவளை மகாவிததியாலயத்தில், அமைக்கப்பட்டிருந்த நலன்புரிநிலையத்தில் கடந்த 23 ஆம் திகதி உதவிப்பொருட்களை வழங்கச்சென்ற பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச உத்தீயோகத்தர்களை கரைச்சி பிரதேச சபைஉறுப்பினர் உள்ளிட்டகுழுவினர் அவர்களது பணிகளுக்கு இடையூறு விளைவித்து அவர்கள் பயணித்த இரண்டு வாகனங்களையும் தடுத்து நிறுத்தினரை்.

இது தொடரபில் கடந்த 24 ஆம் திகதி அதிகாலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்;பட்டதையடுத்து சம்பவத்துடன் தொடர்புபட்ட கரைச்சிப்பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டஇரண்டு பேரை கைது செய்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நிதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு பேரையும் 1747 18 என்ற வழக்கின் பிரகாரம் விளக்கமறியலில் இன்று (31) பதில் நீதிவான் எஸ் .சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியதையடுத்து இரண்டு பேரையும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்லுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share:

Author: theneeweb