சஹ்ரானைப் புரிந்து கொள்ளுதல்: ஸ்ரீலங்காவின் தீவிரமான பயங்கரவாதி -எஸ்.ஐ.கீதபொன்கலன்

ஏப்ரல் 21, 2019 அன்று கொழும்பிலுள்ள மூன்று கத்தோலிக்கத் தேவாலயங்கள் மற்றும் மூன்று உயர்தரக் ஹோட்டல்கள் என்பன குண்டு வைத்து வெடிக்க வைத்ததினால்; பல வெளிநாட்டவர்கள் உட்பட நூற்றுக்கு மேலான மக்கள் மரணமடைந்தார்கள். இன்றுவரை 250 பேருக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த வெடிப்புச் சம்பவம் நூற்றுக்கும் அதிகமானவர்களை அங்கவீனர்களாக்கியும் உள்ளது. இந்த தாக்குதல்கள் யாவும் தற்கொலைக் குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்டன என்றும், இது ஸ்ரீஙகாவில் உள்ள சிறுபான்மையினரில் இரண்டாவது பெரிய இனத்தவர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்டவை என்று பின்னர் தெரியவந்தது.

இந்த தாக்குதல்கள் இயல்பாகவே பல செய்திகளை வெளிப்படுத்தியுள்ளன. முதலாவதாக, பயங்கரவாதிகள் இயன்ற அளவு அதிக அளவிலான மக்களைக் கொல்ல விரும்பினார்கள். அது ஒரு உயிர்த்த ஞாயிறு தினம். பெரிய எண்ணிக்கையிலான மக்கள் அன்றைய தினத்தில் திருப்பலி பூசையில் கலந்து கொள்வார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். இலக்கு வைக்கப்பட்ட தேவாலயங்கள் கட்டமைப்பில் மிகவும் சிறியவையாகும். உதாரணத்திற்கு புனித அந்தோனியார் தேவாலயம் அதே இடத்தில் உள்ள புனித லூசியா தேவாலயத்துடன் ஒப்பிடுகையில் அளவில் சிறியது. முறைமுகமாக அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அதிகளவு மக்கள் உள்ள சிறிய கட்டமைப்பிலான தேவாலயங்களையே அவர்கள் தேடினார்கள்.

இரண்டாவதாக இலக்குகள் தன்மையில் மேற்கத்தைய இயல்புடையனவாக இருந்தன. உள்ளுர் பார்வையின்படி தோவாலயங்கள் மற்றும் கிறீஸ்தவம் என்பன மேற்கத்தைய தூண்டுதல்கள் ஆகும். உள்ளுர் இல்லை. இலக்கு வைக்கப்பட்ட உயர்தர ஹோட்டல்களில் குறிப்பாக ஷங்கிரி-லா ஹோட்டல் மற்றும் கிங்ஸ்பரி ஹோட்டல் என்பன பெரும்பாலும் அடிக்கடி மேற்கத்தைய வருகையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்யும் இடங்களாகும், என்றாலும் ஸ்ரீலங்காவின் பெரும் செல்வச் செழிப்பான  இடங்களாக இவைகளைக் காணமுடியும். எனவே ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மேற்கு மீதான தாக்குல் இதுவாகும். இந்தக் காரணிகளால் மார்ச் 2019ல் கிறிஸ்ட்சேர்ச் படுகொலைகளுக்கு பழிவாங்கும் செயல் இதுவென்ற வாதத்தை இச் செய்கை நியாயப்படுத்துகிறது. ஒருவேளை ஸ்ரீலங்கா ஒரு மென்மையான இலக்காக கருதப்பட்டிருக்கலாம்.

மூன்றாவதாக வெளிநாட்டு சக்திகளின் உதவியின்றி உள்ளுர் பயங்கரவாதிகளால் இதைச் செய்திருக்க முடியாது. இந்தளவு பெரிய தாக்குதக்கு தேவையான ஆதாரங்களும் மற்றும் மனிதவளங்களும் மிகப் பிரமாண்டமானதாக இருக்கும். இந்த வகையான ஒரு தாக்குதலை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு உள்ளுர் அமைப்புகள் தகுதியானவை அல்ல. இந்தப் பின்னணியில்தான் ஐஎஸ்ஐஎஸ் (இஸ்லாமிய அரசு) இனது தொடர்பு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. அதன்படி சில நாட்களுக்குள்ளேயே ஐஎஸ்ஐஎஸ் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டதுடன் அந்த சாதனையைக் கொண்டாடி மகிழ்ந்தது. சம்மாந்துறையில் பல தற்கொலைக் குண்டுதாரிகள் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டார்கள், ஐஎஸ்ஐஎஸ் கொடிகள் மற்றும் இதர சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஏப்ரல் 29ல் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபாக்கர் அல் பாக்தாத்தி தானே ஸ்ரீலங்கா தாக்குதலைப் பாராட்டியுள்ளார். அல் பாக்தாத்தியினது தலையீடு உயிர்த்த ஞாயிறு படுகொலைகளில் ஐஎஸ்ஐஎஸ் க்கு தொடர்பு இருப்பது பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

சஹ்ரான் காசிம்

வெளிப்படையான இந்த உண்மைகளுக்கு அப்பால், இந்த தாக்குதல்கள் மற்றும் அதன் விளைவுகளால் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் பாதிக்கப் பட்டவர்களுக்கு இந்த
இலக்குகளின் தன்மை மற்றும் அதில் தொடர்புபட்டிருந்த கொடூரம் என்பனவற்றைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நிபுணத்துவம் வாய்ந்த சில வர்ணனையாளர்கள் கூட இந்த சம்பவத்தின் முழுத் துயரத்தையும் தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்டார்கள். என்னாலும் இதைப் புரிந்து கொள்ள முடிந்தது என்று நான் சொல்ல மாட்டேன். என்னுடைய “ஸ்ரீலங்காவில் யுத்தத்துக்குப் பின்னான குழப்பங்கள்: ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம்” என்கிற தலைப்பிலான சமீபத்தைய புத்தகத்தில் முஸ்லிம் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும்போது, நான் குறிப்பிட்டிருப்பது, “முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயும் இதற்குச் சமாந்தரமான ஒரு தீவிரவாத செயற்பாடும் அதனுடன் சேர்ந்து தனியான அடையாளத்துக்கான ஒரு செயற்பாடும் இடம்பெற்று வருகிறது. புதிய முஸ்லிம் பிரிவுகளும் மற்றும் குழுக்களும் தங்களது பிரசங்கங்களில் சில சமயங்களில் தூய வடிவிலான இஸ்லாத்தை தத்தெடுக்கும்படி கட்டாயப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இதன் விளைவாக ஆடைக் குறியீடு, தலைமுடி மற்றும் தாடி வளர்ப்பது போன்றவை உட்பட விசுவாசத்தை பகிரங்கமாக வெளிக்காட்டும் காட்சிகள் முஸ்லிம்களின் இருப்பு மற்றும் அதிகாரம் என்பனவற்றின் சின்னமாக அவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அடையாளப்படுத்துகின்றன. தீவிரவாத நடவடிக்கைகள் கூட முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே கூட உள்ளக வன்முறைகளுக்கு வழி வகுத்துள்ளன. அவர்களில் சிலர் நாடு கடந்த வன்முறை அமைப்புகளுடன் உதாரணமாக ஐஎஸ்ஐஎஸ் முதல் ஜிகாத் வரையான அமைப்புகளுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளனர்”.(பக்கம் 133).

ந்த ஆய்வு அடையாளப்படுத்துவது முறுகல் நிலை மற்றும் வன்முறை அதிகரிக்கலாம் என்று. ஆனால் இந்தளவு பெரிய தாக்குதலை நான் எதிர்பார்க்கவில்லை. நான் இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள விரும்புகிறேன். முற்றிலும் பொதுமக்கள் இலக்குகளை தாக்குவதின் மூலம் இந்தக் காட்டுமிராண்டித்தனமான விளக்கத்தை புரிந்து கொள்வதற்கான சிறந்த வழி உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் சூத்திரதாரி எனச் சொல்லப்படும் சஹரான் காசிமின் உளவியலையும் மற்றும் தத்துவத்தையும் விளங்கிக் கொள்வதுதான் என்று நான் எண்ணுகிறேன். அவர் தமிழ்மொழி பேசினார் என்பது எனக்குத் தெரியும் அதை அவர் பெரும்பாலும் அவரது வீட்டு மொழியாகக் கருதினார். பெரும்பாலும் அவரை ஒரு “யு ரியுப்பர்” என வர்ணித்ததினால், அவரது காணொளிகளை நான் இணையத்தில் தேடினேன். எனக்கு ஆச்சரியம் தரும் வகையில் என்னால் அதிகமானவற்றைக் காணமுடியவில்லை, ஒன்றில் சமூக ஊடக நிறுவனங்கள் அவரது காணொளிகளை அழித்திருக்க வேண்டும் அல்லது நான் ஒரு தவறான தேடலை மேற்கொண்டிருக்க வேண்டும்.

இருந்த போதும் நான் ஒரு காணொளியைக் கண்டுபிடித்தேன், அது 5.58 நிமிடங்கள் ஓடுகிறது. அதில் உள்ளதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். முதலாவதாக எப்படி நாங்கள் இதை தவறவிட்டோம் என்கிற கேள்வி என்னைத் திகைப்படையச் செய்தது? இதன் மொழிபெயர்ப்பை
பகிர்ந்து கொள்ளலாமா என்கிற குழப்பம் என்னைச் சூழந்து கொண்டது. வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது என்கிற எண்ணத்தில் மொழிபெயர்ப்பை தொடங்கினேன். அவரது உபதேசம் அசாதாரணமான ஆத்திரமூட்டல் மற்றும் வண்முறைகளைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டிருந்தது. எனவே அதன் முழு மொழிபெயர்ப்பினையும் பிரசுரிப்பதில்லை என்று நான் முடிவு செய்தேன். பொருத்தமான எடுத்தாள்கைகள் மட்டுமே இந்த ஆய்வுக்காகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதன் எடுத்தாள்கைகளை பகிர்வதற்கான காரணம் அந்த உபதேசம் போதுமானளவு எச்சரிக்கைகளைக் கொண்டிருந்ததுதான். ஒருவேளை எதிர்கால வன்முறைகளை அது தடை செய்யும்.

எனது எடுத்துக் கொள்ளல்

சஹரான் காசிமின் பேச்சில் இருந்து சில எண்ணிக்கையிலான எடுத்தாள்கைகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன்.

1. அவர் செய்தது சரிதான். அவரது பேச்சில் சஹ்ரான் வாக்குறுதியளித்திருப்பது, சிதறிய உடல்களைப் பொறுக்கி எடுப்பதில் நாங்கள் மும்முரமாக ஈடுபடுவோம் என்று. அவர் கூறியிருப்பது, “உங்களுக்கு உங்களின் சிதிறய உடல்களைப் பொறுக்குவதற்கு மட்டுமே நேரம் இருக்கும் நாங்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் உங்களை நரகத்துக்கு அனுப்பிக் கொண்டிருப்போம்” உயிர்த்த ஞாயிறு தினத்தன்று அது உண்மையானது. அவர் உளறவில்லை. ஆகவே அவரது மற்ற வலியுறுத்தல்களை தீவிரமானதாக எடுத்தக்கொண்டு அவற்றை முன்கூட்டியே விடப்பட்ட எச்சரிகையாகப் பரிகணிக்க வேண்டும். இது மேலும் நடக்கவுள்ள தாக்குதல்களையும் இரத்தம் சிந்தபபடுவதையும்; தடுக்கும்.. நாங்கள் அவருடைய மற்றைய பிரசங்கங்களையும் மற்றும் பிரசுரங்களையும் அப்படி ஏதாவது இருந்தால் அவரது தத்துவம் மற்றும் திட்டங்கள் பற்றிய எங்கள் புரிதலை விரிவாக்குவதற்காக அவற்றை ஆராய வேண்டும்.

2. பொதுமக்கள் இலக்குகள் நியாயமான விளையாட்டு: பொதுமக்கள் ஏன் இலக்கு வைக்கப் படுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள எனது நண்பர்கள் சிலரினால் முடியவில்லை. குர்ஆன் மற்றும் இஸ்லாம் பற்றி சஹ்ரானின் விளக்கத்தின்படி பொதுமக்கள் மற்றும் இராணுவ இலக்குகள் என்பனவற்றுக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. அவர் சொன்னது”எனது சகோதரர்களே இராணுவம், காவல்துறை அல்து பொது காபிர் (நாஸ்திகன்) என்று வித்தியாசம் பார்க்காதீர்கள். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள். இஸ்லாத்தில் காவல்துறை சீருடை அணிபவர்களுக்கு என்றும் மற்றும் இராணுவச் சீருடை அணிபவர்களுக்கு என்றும் வித்தியாசமான சட்டங்கள் கிடையாது. இஸ்லாத்தில் உள்ள ஒரே வித்தியாசம் முஸ்லிம்களுக்கும் மற்றும் காபிர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் மட்டும்தான். மார்க்கம் (இஸ்லாம்)
இராணுவம் மற்றும் பொதுமக்கள் என்று வித்தியாசம் காட்டவில்லை”. ஆகவே பயங்கரவாதிகளின் முனனோக்கங்களில் இருந்து முஸ்லிம் அல்லாத சிவிலியன்களின்
இலக்கு முற்றிலும் சட்டபூர்வமானவை. சஹ்ரானைப் பின்பற்றுபவர்கள் இன்னமும் செயற்பாட்டில் இருந்தால் முஸ்லிம்கள் அல்லாத பொதுமக்கள் இலக்குகள் மீதான அதிக தாக்குதல்களை நாங்கள் எதிர்பார்க்கவேண்டும்.

. 3. அது பௌத்தர்களுக்கு எதிரானது: ஆரம்பத்தில் சஹ்ரானின் போர் கிறீஸ்தவர்களுக்கு
எதிரானதாக இருக்கவில்லை. இதைத்தான் அவர் தனது ஜிகாத் (புனித போர்)
பௌத்தர்களுக்கு எதிரானது என்று சொல்லியிருக்க வேண்டும். “இதற்கிடையில் நாங்கள்
அல்லாஹின் எதிரிகள் மற்றும் காபிர்களைப்; பற்றி சில விஷயங்கள் சொல்லவேண்டும்.
அல்லாவின் எதிரிகள் மற்றும் காபிர்கள் உங்கள் அழிவு ஆரம்பமாகிவிட்டது. நீங்கள்
அழித்த ஒவ்வொரு மசூதிகளையும் நாங்கள் கணக்கிலெடுத்துள்ளோம் மற்றும் நீங்கள்
எரித்துச் சாம்பலாக்கிய ஒவ்வொரு கடையையும் நாங்கள் நினைவில் வைத்துள்ளோம்.
நீங்கள் கொலை செய்த முஸ்லிம்களின் இரத்தம் வீணாகிவிடாது. அல்லாவின்
விருப்பப்படி இதற்கு நாங்கள் பழி வாங்குவோம். ஜிகாத்தின் வலியை, ஜிகாத்தின்
அளவை மற்றும் ஜிகாத்தின் எடையை நீங்கள் உணர்வீர்கள். ஒவ்வொரு பௌத்தரும்
அனுபவிக்கும் வேதனையின் அழுகுரலை நீங்கள் காண்பீர்கள்…. எங்கள் மசூதிகளை அழித்தவர்களை நாங்கள் நிச்சயம் அழிப்போம். அதன் பின்பு கூட எங்கள் கத்திகள் திருப்தி அடையாது. பௌத்த தீவிரவாதிகளே நாங்கள் நிச்சமாக உங்களுக்காக் வருவோம். எங்கள் கோவில்களை அழித்த மற்றும் எங்கள் சொத்துக்களைத் தொட்ட பௌத்த காபிர்களிடம் நாங்கள் உங்களுக்காக வருவோம் எனச் சொல்ல விரும்புகிறோம். முஜாகீதீன்களின் இமானி பலத்தின் முன்பு உங்கள் காவல்துறை, உங்கள் இராணுவம் மற்றும் உங்கள் புலனாய்வுப் பிரிவுகள் என்பன பயனற்றவை.

ஒருவேளை . இந்தக் காணொளி அவர் ஐஎஸ்ஐஎஸ் இனது அங்கத்தவாவதற்கு முன்பு உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். ஐஎஸ்ஐஎஸ் இல் ஒரு அங்கத்தவரானதின் பின்னர் அவரது துப்பாக்கி கிறீஸ்தவாகளுக்கும் மேற்கத்தையவர்களுக்கும் எதிராகத் திருப்புவதற்கு நிர்ப்பந்தப் படுத்தப்பட்டிருக்கலாம். எப்படியாயினும் ஸ்ரீலங்காவில் பௌத்த மதம் ஒரு இலக்காக இனிமேல் இருக்காது என்று நம்புவதற்கான காரணம் எதுவுமில்லை. பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் இருந்து கண்டுபிக்கப்பட்டவை தொடர்பாக சில ஊடகங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் இதற்கான சாத்தியத்தை உறுதிப்படுத்துகின்றன. கிறீஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்து ஆலயங்கள் என்பனவற்றுக்கு மேலதிகமாக பௌத்த இடங்கள் குறிப்பாக பௌத்த வழிபாட்டு
இடங்கள் என்பனவும் கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.

4. ஜிகாத்தின் வாக்குறுதி: ஸ்ரீலங்காவில் ஒரு யுத்தத்தை முன்னெடுப்பதாக சஹ்ரான்
வாக்குறுதி வழங்கினார்.”இன்ஸா அல்லாஹ் விரைவிலேயே இந் நாட்டில ஜிகாத்தின்
சந்தையை நாங்கள் இங்கு திறப்போம்.. ஆயிரக்கணக்கான எங்கள் தற்கொலை
குண்டுதாரிகள் தங்கள் முகங்களில் புன்னகைகளுடன் உங்களை அழிப்பதை நீங்கள்
கேட்பது மட்டுமல்ல பார்க்கவும் போகிறீர்கள். ஏனென்றால் எங்கள் விடுதலையாளர் எங்களுக்கு வழங்கிய வாக்குறுதி அது ….” என்று அவர் முழக்குகிறார். ஒருவேளை ஏற்கனவே இங்கு ஆயிரக்கணக்கான தற்கொலை குண்டுதாரிகள் தங்கள் முகங்களில் புன்னகையுடன் காத்திருக்கிறார்களோ. அது எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஏன் அப்படி இருக்கக் கூடாது என்பது எனக்குத் தெரியவில்லை. அவரது வாக்குறதியான தற்கொலையாளிகளின் படுகொலை உண்மையாகிவிட்டது.

5. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம் விரோத கலவரங்கள் சஹ்ரானின் கோபத்துக்கும் மற்றும் அணி திரட்டலுக்கும் பெரும் பங்களிப்புச் செய்துள்ளன என்பது தெளிவு. “அவர்கள் உங்கள் மசூதியை சேதப்படுத்தினால், அவர்களின் விகாரையை அழியுங்கள். இந்தப் பயணத்தில் நீங்கள் கொல்லப்பட்டால் நிச்சயமாக நீங்கள் ஒரு ஷகீட் (சமயத்துக்காக உயிர்துறக்கும் தியாகி) ஆக மாறுவீர்கள். மார்க்கம் வழங்கியுள்ள சாட்சிகளின் அடிப்படையில் நான் உங்களுக்குச் சொல்வது அது உங்கள் கடமை என்று. (முஸ்லிம்) சட்ட வல்லுனர்களின் கூற்றின்படி காபீர்களை நிறுத்துவதைத்; தவிர பெரிய வாஜிப் (கடமை) எதுவுமில்லை ….” சமீபத்தைய முஸ்லிம் விரோதக் கலவரம் ஏனைய முஸ்லிம்களையும் தீவிரப்படுத்தி அணி திரள உதவியிருக்கலாம்.;. ஆகவே சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு முஸ்லிம் விரோத சொல்லாட்சிகளையும் மற்றும் வன்முறைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான பாரிய பொறுப்பு உள்ளது.

தேனீமொழிபெயர்ப்பு எஸ்.குமார்

Share:

Author: theneeweb