பாடசாலை சூழலில் காணப்படும் பற்றைக்காணிகளால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

கிளிநொச்சி நகரில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற பாடசாலையான கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் சூழலில் காணப்படுகின்ற பற்றைக் காணிகளால் பாடசாலையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல்நிலையில் பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலையில் இவ்வாறு பற்றைக் காடுகளாக காணப்படுகின்ற தனியார் காணிகளால் பாடசாலையின் பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது.

குறித்த காணிகள் தனியார் காணிகள் என்றும் காணி உரிமையாளர்கள் நீண்ட காலமாக குறித்த காணிகளை துப்பரவு செய்து பராமரிக்காது விட்டுள்ளனர். எனவே கரைச்சி பிரதேச செயலகம் குறித்த காணிகள் விடயத்தில் மிக விரைவாக உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு பாடசாலையின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பாடசாலை சமூகத்தால் கோரப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb