வயோதிபர்களை அச்சுறுத்தி பணம், நகை கொள்ளை

வீட்டில் தனித்திருந்த வயோதிபர்களை அச்சுறுத்தி 55 பவுண் நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

 

அராலி தெற்கு வட்டுக்கோட்டை உடையார்கட்டு பகுதியில் உள்ள வீடோன்றிலையே இக் கொள்ளை சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

அது குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டில் 62 வயதுடைய கணவர் , மனைவி மற்றும் மனையின் தாய் ஆகியோர் வசித்து வந்த நிலையில் அதிகாலை வீட்டின் கூரையை பிரித்து உட்புகுந்த முகமூடி கொள்ளையர்கள் வயோதிபர்களை மிரட்டி 55 பவுண் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் என்பவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Author: theneeweb