பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல் ரீதியான வன்முறைகள் – பேசாப் பொருளைப் பேசுதல்

நவஜோதி ஜோகரட்னம்

லண்டன்.

நெதர்லாந்து 34 அவது பெண்கள் சந்திப்பு சந்திப்பு முக்கியம் வாய்ந்துது. 24 ஆவது பெண்கள் சந்திப்பு – 2005 ஆம் ஆண்டு லண்டன் Tamil information center  துளசியில் இடம்பெற்றபோது முதற் தடவையாக பங்குபற்றியிருந்தேன். அச்சந்திப்பில் ‘எனக்கு மட்டும் உதக்கும் சூரியன்’ என்ற எனது கவிதைத் தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டதை இங்கு நினைவிருத்த விரும்புகிறேன்.

நிமிடத்துக்கு ஒரு பெண்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் ஆசிய நாடுகளில் முன்பு என்றுமில்லாத அளவிற்கு அண்மைக்காலத்தில் அதிகரித்து வருவதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆசியாவில் ஒரு நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் படுகின்றாள்.;.  SGBV (Sexual and Gender Based violence)  உடல் ரீதியாக இந்த ஆணும் பெண்ணும் வேறுபட்டவர்கள்.  Social construct – Gender

ஆசிய இனத்தவரிடையே சமூகக் கட்டமைப்புக்களினூடாக சமூகத்தினால் உருவாக்கப்படும்; கட்டுப்பாடுகளால் பெண்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு வன்முறைச் சம்பவம் நடந்தால் ஆணின் குற்றம் முற்றாக மறைக்கப்படுகின்றது என்றே கூறலாம். ஆனால் பெண்ணை நீ ஏன் அந்த நேரத்தில் வெளியில் சென்றாய் என்ற கேள்விதான் மிஞ்சுகிறது. இலங்கையில் பாலியல் ரீதியில் பெண்சார்ந்து நடைமுறையில் காணப்படும் பாலியல் வன்முறைகள் மிகவும் சிறுபகுதியே புகார் செய்யப்படுகின்றன. இதில்  ; Hidden Issues   அதாவது பேசாப்போருள் தான் அதிகமாகக் காணப்படுவதாக மிக அண்மையில் வெளியான ஆய்வுகள் கூறுகின்றது.

புகார் அளிப்பதில் தயக்கம்

Anecdotal evidence  ன்று சொல்லுகின்ற ஆதாரங்களோடு ஊர்க்கதைகள் மக்கள் மத்தியல் இவ்வித செயல்கள் பரவலாகப் பேசப்படுகின்றன. Media report   ஊடக அறிக்கை கூட உடனுக்குடன் பதிவு செய்யப்படுகின்றது. வீட்டு வன்முறைகள்Domestic Violence)  – பாலியல் வன்முறைகள் –  Rape  விடயம் அதாவது வயது வந்தவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது – குழுக்களாக பாலியல் வன்செயலில் ஈடுபடுத்துவது – வயது வந்தவர்கள் வயதில் குறைந்தவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

பாலியல் புகார்கள பொதுவெளியில் ஏன் கொண்டு செல்லப்படுவதில்லை என்ற கேள்வி எழுகின்றது. நீதித் துறையில் பாலியல் வன்முறை குறித்த உணர்வுபூர்வமான தெளிவு இல்லை என்றே கூறவேண்டும்.

ரரவய பத்திரிகையின் துணிச்சல்

சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு உயர் நீதி மன்றத்தில் தன் கணவரை பிணையில் அதாவது (Bail)    எடுப்பதற்காக மனைவி ஒருவர் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கின்றார். குறிப்பிட்ட அந்த நீதிபதியே அந்த நீதி மன்ற வளாகத்துக்கு உள்ளேயே அந்தப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கிறார். இத்தகைய ஒரு நீதிபதி ஒருவரே அந்த அவலைப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதை RAVAYA   என்ற சிங்களப்பத்திரிகையின் ஆசிரியர் விக்ரர் ஐவன் அவர்கள் அந்த நிகழ்வைத்; எழுதி அந்த நீதிபதியை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு துணிச்சலாக முன்னெடுத்தார் என்பதைக் குறிப்பிடவேண்டும்.

அடுத்து Impunity பற்றிக் குறிப்பிடவேண்டும். அதாவது தண்டிக்கப்படுவதில்லை. பாலியல் வன்முறைகளைச் செய்தவர்கள் மிக சொற்பமான தண்டனையே வழங்கப்படுகின்றது. அத்தோடு நீதி கோரும் வசதி குறைந்த ஏழைப்பெண்கள் நீண்ட காலம் நீதி மன்றங்களுக்கு அலைய வேண்டி இருக்கும். இதனால் அவர்கள் அதனை பேசாப்பொருளாக்கி விடுகின்றார்கள்.

நீதிபதிகள், வழக்குரைஞர்கள், அரசதரப்பு வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் பாலியல் சமத்துவம் பற்றியும், பாலியல் நீதி குறித்தும் எந்த விதமான உணர்வுமற்றவர்களாக இருக்கின்றார்கள் மாறாக ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். பாலியல் வன்முறைக்கு எதிரான சட்ட பூர்வமான நடவடிக்கை என்பது மிக நீண்ட செயல் முறைகளைக் கொண்டது. விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பெண்ணின்மீது எழுப்பப்படும் கேள்விகள் அநாகரிகமாக, பதில் சொல்வதற்குத் தயங்குவாள். வெட்கப்படுவாள்.

அடுத்து J CEDAW (The  Committee on the Elimination of Discrimination against women ) என்ற பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை அகற்றுவதற்கான சர்வதேச அமைப்பு கூறுகின்றது இலங்கையில் நீதித்துறை சுயாதினமாகவும், வினைத்திறனோடும் அமைந்திருக்க இல்லை என்றுதான் கூறுகின்றது
ஒரு வழக்கில் குற்றம் இழைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சாட்சியம் கூற முன்வரும் சாட்சிகளை பாதுகாக்கும் சரத்துக்கள் இலங்கையில் பேணப்படுவதில்லை என்று கூறப்படுகின்றது உதாரணத்துக்கு விசுவமடு (வன்னி)யில் இடம்பெற்ற பாலியல் வன்கொடுமையக் குறிப்பிடலாம். நான்கு ஆமிக்காரர்களினால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண் இராவணுத்திடம்; சென்று சரணடைந்திருக்கிறாள். அவர்கள் பொலிசிடம் சென்று புகார் செய்யும் படி இராணுவத்தினர் கூறியதும் பின்;னர் அந்தப் பெண் உறுதியுடன் போராடி அந்த இராணுவ வீரர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டதைக் குறிப்பிடலாம். அது உண்மைச் சம்பவம் தீர்ப்பு உறுதியானது. ஆனால் அந்தப் பெண் உறுதியாக நின்டு போராடிதால்தான் அத் தண்டனை இராணுவத்தினருக்குக் கிடைத்தது.

பத்துத் தினங்களுக்கு முன்னர் பங்களாதேசத்தில் 19 வயதுச்Nusrat Jahan Rafi  என்ற பெண் இஸ்லாமிய பாடசாலை அதிபர் அதுவும் ஒரு மதகுரு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கிறார். அவள்; அதனை பொலிசாரிடம் முறையீடு செய்திருக்கிறாள். இஸ்லாமிய அச்சுறுத்தாளர்கள் மார்ச் மாதம் 10 ஆம் திகதி அவளை மண்ணெண்ணை ஊற்றி கொழுத்திக் கொன்று விட்டார்கள். என்ன ஒரு நெஞ்சை அதிரவைக்கும்; ஒரு கொடுமையான ஒரு செயல் பெண்ணுக்கு.

பொள்ளாச்சி மாவட்டத்தில் கூட்டுப்பாலியல்

தந்தை வழி சமூக அமைப்பில் பெண்கள் 2ஆம் தரப் பிரஜைகளாகவே பார்க்கப்படுகின்றார்கள். பொள்ளாச்சி மாவட்டத்தில் நடாத்தப்பட்ட கூட்டுப்பாலியல் வன்முறை தமிழகத்தை உலுப்பியிருக்கிறது. கிட்டதட்ட 100 பெண்கள் இந்தப்;பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடாத்தப்பட்ட இந்தச் செயல்களுக்கு சென்ற மாதம்தான் பாலியலுக்கு எதிரான வன்முறை குறித்து புகார் செய்யப்பட்டிருக்கிறது. இளம் பெண்களுக்கு போலி ஐடிக்களைக் கொடுத்து பெண்கள் என நினைத்து அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்தி பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்;டிருக்கிறார்கள். அவற்றைப் புகைப்படங்கள் எடுத்து வெளிநாடுகளுக்கு விற்று கோடிப்பணம் சம்பாதித்திருக்கிறர்கள். இத்தகைய வன்முறைகள் குழுவாக மேலிடங்களின் வசதியோடு இடம்பெற்றிருக்கிறது. ஒரு பெண்பிள்ளை பொலிசுக்கு புகார் கொடுத்ததும் அந்தப்பிள்ளையின் அண்ணனை அடித்திருக்கிறார்கள். இப்படியான செயல்களால் அவை பேசாப்பொருளாகவே மாறிவிடுகின்றன. இத்தகைய செயல்களால் பெண்களின் எதிர்காலம் பாதிக்கப்பகின்றது. அதாவது பொள்ளாச்சியில் 3 திருமணங்கள் நிற்பாட்டி, அங்கு பெண் எடுக்கக் கூடாது என்ற கோஷம் எல்லை வரை சென்றிருக்கிறது.

இலங்கை இந்தியாவிலும் சரி நாம் கேட்டிருக்காத அளவில் மோசமான வன்முறைகள் இன்றும் இடம்பெற்று வருகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் விழிப்புணர்வு பெற்ற அமைப்புக்கள் அதற்கு எதிரான போராட்டங்களை நாடு தழுவிய அளவில் முன்னெடுத்து வருவது சற்றே ஆறுதல் தரும் செய்தியாகும்;.

இந்நிலையில் புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற மகளிர் அமைப்புக்கள் இத்தகைய அநீதிக்கு எதிரான போராட்டங்களுக்கு உணர்வு பூர்வமான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது நமது கடமையாகும்.
ஏற்பாட்டாளர்கள் திரேசிற்றா அந்தனி மற்றும் உமா பரராஜசிங்கம் போன்றவர்களுக்கு மிண்டும் நன்றியைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.

18.4.2019.

Share:

Author: theneeweb