பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் UL 226 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து குறித்த நபரிடம் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Share:

Author: theneeweb