கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தால் தகவலறியும் சட்டம் உதாசீனம் செய்யப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தால் தகவலறியும் சட்டம் உதாசீனம் செய்யப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கோரப்பட்ட தகவல்கள் வழங்காது குறித்தச் சட்டத்தை உதாசீனம் செய்யும் வகையில் மாவட்டச் செயலகம் நடந்துகொள்கிறது.என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்டச்செயகத்தினால் தகவல் அறியும் சட்டம் உதாசீனம் செய்யப்பட்டமை தொடர்பில் தகவல் கோரியவர் குறித்தளிக்கப்பட்ட அலுவரிடம் இன்று மேன் முறையீடு செய்துள்ளார்

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
தகவலறியும் சட்டத்தின் ஊடாக கடந்த 12-03-2019 அன்று மாவட்டச்செயலகத்திடமிருந்து சில தகவல்களை  கோரி ஊடகவியலாளர்  ஒருவர் விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தார்.  விண்ணம் கிடைக்கப்பெற்று 14 வேலை நாட்களுக்குள்  கோரப்பட்ட தகவல் வழங்கலாமா இல்லையா என்ற பதில் அனுப்பியிருக்க வேண்டும். வழங்க முடியும் என்றால் அடுத்து  விண்ணப்பித்த திகதியிலிருந்து 28 வேலை நாட்களுக்குள் கோரப்பட்ட தகவல்கள் உரியவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால்  இங்கு அவை எதுவும் இடம்பெறாத நிலையில்  தகவல் கோரிய ஊடகவியலாளருக்கு 04-04-2019 திகதியிடப்பட்ட கடிதம் மூலம்  தகவல் வழங்குவதற்கு 24-04-2019 வரை  மேலதிக   காலம் சட்டத்தின் பிரகாரம் கோரப்பட்டிருந்தது மோவட்டச் செயலக தகவல் உத்தியோகத்தரால் கோரப்பட்டிருந்தது. இருந்தும் இன்று (06-05-2019) வரை மாவட்டச் செயலகத்தினால் எவ்வித தகவல்களும்  விண்ணப்பதாரிக்கு வழங்கப்படவில்லை.

எனவே இது தொடர்பில் விண்ணப்பதாரியான ஊடகவியலாளர் இன்று(06)  தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் குறித்தளிப்பட்ட அலுவலரிடம்  மேன்முறையீடு  செய்துள்ளார்.

இதேவேளை மற்றுமொரு ஊடகவியலாளர்  உள்ளிட்ட சிலர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திடம் சில தகவல்களை கோரி 12-04-2019 அன்று விண்ணப்பங்களை செய்திருந்த போதும் இன்று(06) வரை  அவர்களுக்கும்   எவ்வித  பதில்களும் அனுப்படவில்லை.
Share:

Author: theneeweb