ஷரியா பல்கலைக்கழகம் என்ற பெயரில் எந்தவொரு நிறுவனமும் அனுமதியை கோரவில்லை

ஷரியா பல்கலைக்கழகம் அல்லது மட்டக்களப்பு பீடம் (BatticoaCampus) என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படும் எந்தவொரு நிறுவனமும் பட்டப்படிப்பு கற்கைநெறியை நடத்துவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அனுமதியை கோரவில்லை  என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் புனானியில் அமைக்கப்பட்டுள்ள ஷரியா பல்கலைக்கழகம் அல்லது மட்டக்களப்புபீடம் (Batticoa Campus) என்று அடையாளப்படுத்தப்படும் அமைப்பு தொடர்பாக வெளியான பல செய்திகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், கிழக்கு மாகாணத்தில் புனானியில் அமைக்கப்பட்டுள்ள ஷரியா பல்கலைக்கழகம் அல்லது மட்டக்களப்புபீடம் (Batticoa Campus) என்று அடையாளப்படுத்தப்படும் அமைப்பு தொடர்பாக வெளியான பல செய்திகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

1978 ஆம் ஆண்டு பல்கலைக்கழக சட்டம் (அடிக்கடி திருத்தம்) அமைவாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விடையதானத்துக்கு உட்பட்டமை 15 அரச பல்கலைக் கழகங்கள் போன்றவற்றின் கல்வி திட்டமிடுதல் மற்றும் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அந்த பல்கலைக் கழகங்களில் நிர்வாகங்களை முறைப்படுத்தலுக்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதே மாத்திரம் ஆகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஷரியா பல்கலைக்கழகம் அல்லது மட்டக்களப்பு பீடம் (Batticoa Campus) என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படும் எந்தவொரு நிறுவனமும் பட்டப்படிப்பு கற்கைநெறியை நடத்துவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அனுமதியை கோரவில்லை  என்றும் இதற்காக எந்தவொரு அதிகாரமும் இவ்வாறான அமைப்புக்கு வழங்கவில்லை என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவலியுறுத்த விரும்புகிறது.

Share:

Author: theneeweb