சி.ஐ.டி.யால் வெளிப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் 700 கோடி சொத்து

 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான 700 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் 14 கோடி ரூபா பணம் தொடர்பில் பிரதான விசாரணையாளர்களான சி.ஐ.டி.யினர் அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந் நிலையில் அவற்றை முடக்கி, அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை சிறப்பு சி.ஐ.டி. குழு ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதில் 14 கோடி ரூபா பணத்தில் ஒரு தொகுதியை சி.ஐ.டி. மீட்டுள்ளதுடன் ஏனைய பணம் வங்கிக்கணக்குகளில் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த வங்கிக்கணக்குகளை முடக்கி விசாரனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே  இந்த பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான 700 கோடி ரூபா பெறுமதி கொண்ட சொத்துக்களை சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்தியுள்ளது. அந்த சொத்துக்களையும் முடக்கி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb