போலி பதிவாளர் அலுவலகத்தை நடத்தி சென்றவர்கள் கைது

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிய பதிவாளர் அலுவலகம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதோடு அதனை நடத்திச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதோடு அலுவலகமும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்திலிருந்து 27 அரச அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய இறப்பர் முத்திரைகளும் மடிக்கணனியும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 மற்றும் 25 வயதுடை குறித்த பிரதேசத்தை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb