வவுனியாவில் காட்டுப் பகுதியில் இருந்து தோட்டாக்கள் மீட்பு

வவுனியா, அலகல்ல, அளுத்கம பிரதேசத்தில் காட்டுப் பகுதியில் இருந்து விமானங்களை தாக்கியழிக்கும் 85 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா இரட்டைப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை இவை கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளால் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர் அந்தப் பகுதியில் மேலதிக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், எனினும் எவ்வித வெடி பொருட்களும் மீட்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பகுதி விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் இருந்த பகுதி என்று பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட வெடி குண்டுகள் வவுனியா நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய செயலிழக்கச் செய்யப்பட உள்ளன.

Share:

Author: theneeweb