அமைச்சர் ரிஷாட் வாக்குகளை அதிகரித்த விதம் – சி.ஐ.ஏவின் வெளிப்படுத்தல்

மன்னார் பகுதியில் வாழ்ந்து பின்னர் யுத்த காலப்பகுதியில் புத்தளம் பிரதேசத்திற்கு வந்த, இடம்பெயர்ந்த மக்கள், தற்போது நிரந்தர வதிவிடம் கொண்ட இடம் தொடர்பில் பெரும் சிக்கல் நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கு காரணம், அமைச்சர் றிஷாட் பதியூதீனின் வாக்குகளை அதிகரிப்பதற்காக புத்தளம் பகுதியில் நிரந்தர வதிவிடத்தை கொண்ட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மன்னார் வாக்காளர் பட்டியலில் உள்ளடக்கியுள்ளமை ஆகும்.

இந்த நிலைமை காரணமாக பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் தற்போது மேற்கொண்டு வரும் ஆள் அடையாள பரிசோதனையின் போது பல சிக்கல் நிலைமையை எதிர்கொண்டுள்ளதாக ஹிரு சி.ஐ.ஏ மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை குடியேற்றுவதாக உலகிற்கு உணர்த்தி, வில்பத்து வனப்பகுதி வலயத்திற்கு சொந்தமான விலாத்திகுளம் மற்றும் கல்லாறு ஆகிய வனப்பகுதிகளை அழித்த விதத்தை 2015 ஆம் ஆண்டு ஹிரு சி.ஐ.ஏ வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

 

 

 

 

Share:

Author: theneeweb