மலையக மக்கள் முன்னணியின்  கட்சிக் கொடிகள் தீக்கிரை

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 9 ஆவது ஆண்டு சிரார்த்த தின நிகழ்வுகள் இன்று அக்கரபத்தனை A மன்ராசி நகரிலுள்ள நிஷாந்தினி மண்டபத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய மன்றாசி நகரம் முழுவதும் கட்சியின் கொடிகளைக் கொண்டு நேற்றிரவு அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இந்திலையில் இனந்தெரியாதோரால் மன்றாசி நகரில் அலங்கரிக்கப்பட்டிருந்த கட்சியின் கொடிகளைப் பிடுங்கி தீக்கரையாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மலையக  மக்கள் முன்னணியின் அக்கரபத்தனை பிரதேச அமைப்பாளர்கள் அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

Share:

Author: theneeweb