புலிகளின் ஆவணங்களைத் தேடி முல்லைத்தீவில் அகழ்வு பணி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் தனிநபர் ஒருவரின் காணிக்குள் இன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாகத் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் இருப்பதாகத் தெரிவித்து நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு இந்த அகழ்வு நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றது.

 

இதன்போது நீதிமன்ற பதிவாளர் மற்றும் பொலிஸார், படையினர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலகர் ஆகியோர்  முன்னிலையில் குறித்த காணிப் பகுதியில் தோண்டப்பட்ட போதும் எதுவித பொருட்களும் அங்கிருந்து மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb