முஸ்லிம் மக்கள் பெருமளவிலான ஆயுதங்களை வைத்திருந்தமையின் நோக்கம் பாரதூரமானது – வாசுதேவ

 

பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் பொறுப்பாக்கத்தின் கீழ் காணப்பட்டாலும், பாதுகாப்புசார்  நடவடிக்கைகள் அனைத்தும்   பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்  வழிநடத்தில்  பிரகாரமே இடம் பெற்றுள்ளது. பொலிஸ்மா அதிபர்  பூஜித  ஜயசுந்தர  ஐக்கிய தேசிய கட்சியின்   விருப்பத்திற்கமைய  செயற்பட்டுள்ளார்.முஸ்லிம் மக்கள் பெருமளவிலான ஆயுதங்களை  வைத்திருந்தமையின் நோக்கம்  பாரதூரமானது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ  நாணயக்கார தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கிழக்கு  மாகாணம் உட்பட  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்  உள்ள முஸ்லிம் மக்களிடம் இருந்து   பெருமளவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த மாதம்  21ம் திகதி  தற்கொலை குண்டுத்தாரிகளினால் நடத்தப்பட்ட பின்னணியினை சாதாரண  மக்களும்  அறிந்திருக்க வேண்டும்.

தாக்குதலை  தொடர்ந்  முஸ்லிம்-சிங்கள  இனத்தவரிடையில்   இனகலவரம் ஏற்படும் என்பது  முன் கூட்டியே     யூகிக்கப்பட்டுள்ளது.பலர்  தமது  பாதுகாப்பினையும்,  தாக்குதலை தீவிரப்படுத்தவுமே இவ்வாறான ஆயுதங்களை  தம்வசம் வைத்துள்ளார்கள்.

முறையான  திட்டமிடலுக்கு அமையவே  கடந்த மாதம்  குண்டு   தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.இனகலவரம்   ஏற்படுவற்கான  சூழ்நிலைகள்  முறையான  வழிநடத்தலுக்கு அமைய   தவிர்க்கப்பட்டுள்ளன.

அடிப்படைவாதிகளின் நோக்கம்  எமது  நாட்டை பொறுத்தவரையில் வரையறுக்கப்படவில்லை.பல்பேறு  பிரிவிலும் இவர்கள் தாக்குதல்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர் .

அரச   தலைவர்களையும்  கொலை செய்வதற்கான திட்டமிடல்களும் வகுக்கப்பட்டுள்ளன.இதன் பின்னணியில் அரசியல் நோக்கங்களும்  காணப்படும். பாராளுமன்ற  சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்லவின்  தரப்பினர்   ஜனாதிபதிக்கு  அவமதிப்பினை ஏற்படுத்தும் விதமாக   கடிதங்களை  பறிமாற்றியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  விடயங்களை  இதுரையில் அரசாங்க தரப்பு இதுவரையில் குறிப்பிடவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb