பயிற்றப்பட்ட 7 தற்கொலை குண்டுதாரிகள் கைது

தடை செய்யப்பட்ட தேசிய தௌஹித் அமைப்பின்  ஆதரவாளர்களாக அடையாளம் காணப்பட்ட காத்தான்குடியை சேர்ந்த  பயிற்சி பெற்ற 7 தற்கொலை குண்டுதாரிகள் அம்பாந்தோட்டையில் வைத்து திங்களன்று  கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்டவர்கள் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தொடர்தாக்குதலுடன் தொடர்புடைய  சஹ்ரான் ஹாசிமின் நெருங்கிய சகாகக்களாவார்கள். இவர்கள் சஹ்ரான் ஹாசிமின் சகோதரன் ஹாசிமினால் அம்பாந்தோட்டைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இவர்களுக்கு  ஆயுதங்களை பயன்படுத்த நீண்ட காலமாக  சிறந்த முறையில் பயிற்சியளிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களுக்கு குறித்த பயிற்சிகளை மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய  மொஹமட் நாசர் மொஹமட் அசாத் என்பவர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக  நபர்களை காத்தான்குடி குற்றத்தடுப்பு பிரிவினை சேர்ந்த பொலிஸ் அதிகாரி கஸ்தூரியாரச்சி மற்றும் பொலிஸ் குழு கைது செய்து தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட சந்க நபர்களிடம் தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹித் ஜமாத்  அமைப்பு பற்றியும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்தும்  விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb