பயணியின்பார்வையில் – அங்கம் -06 லண்டனில்நடக்கும்மாதாந்தஇலக்கியசந்திப்பில்கற்றதும்பெற்றதும்

 

முரண்கள்விலத்திமனிதரும்மாக்களும்நாடும்

இளகியமனம்ஒன்றைப்பொருத்திவீதிவழிவந்தால்

இன்பமொன்றைஇவ்வுலகுபெற்றிடக்கூடும்

  • மாதவிசிவலீலன்

 

முருகபூபதி

 

எனதுலண்டன்வருகைபற்றிஅங்கிருக்கும்கலைஇலக்கியஊடகநண்பர்களுக்குதெரிவித்திருந்தேன். அவர்களில்சிலர்தொடர்புகொண்டுசந்திப்புகளுக்கும், வானொலி, தொலைக்காட்சிநேர்காணல்களுக்கும்ஒழுங்குசெய்யவிருப்பதாகசொன்னார்கள்.

சந்திப்புகள்உவப்பானவை! நேர்காணல்கள்எச்சரிக்கையானவை! சமகாலத்தில்இணையவழிகளில்மின்னல்வேகத்தில்பரவக்கூடியவை. லண்டனிலிருந்துதொடர்புகொண்டவர்கள்எனதுநெஞ்சத்திற்குநெருக்கமானவர்கள்.

அவர்களுடனானஉறவும்தொடர்பும்நீண்டகாலமாகநீடித்திருப்பவை. நண்பர்இளையதம்பிதயானந்தாவைஇலங்கைவானொலிகலையகத்தில்1997 ஆம்ஆண்டில்நண்பர்வி.என். மதியழகன்ஏற்கனவேஅறிமுகப்படுத்தியிருந்தார்.

அக்காலப்பகுதியில்எனதுஇலக்கிய – ஊடகத்துறைபிரவேசவெள்ளிவிழாமெல்பனிலும்இலங்கையில்எமதுஊரிலும்நடந்தது. எமதுஊர்விழாவில்என்னைஇலக்கியஉலகிற்குஅறிமுகப்படுத்தியமல்லிகைஆசிரியர்டொமினிக்ஜீவாவைபாராட்டிவிருதுவழங்கிகௌரவித்தோம்.

அச்சமயம்பிரேம்ஜிஞானசுந்தரன், ராஜஶ்ரீகாந்தன், ஆ. சிவநேசச்செல்வன்,  தெளிவத்தைஜோசப், துரைவிஸ்வநாதன், மேமன்கவி,  வன்னியகுலம், சூரியகுமாரி, நீர்கொழும்பூர்முத்துலிங்கம், நவமணி ஆசிரியர்சிவலிங்கம், வீ.தனபாலசிங்கம், தங்கவடிவேல்மாஸ்டர்ஆகியோருடன்வருகைதந்துஇலங்கைவானொலிதமிழ்ச்சேவையின்சார்பில்உரையாற்றியவர்இளையதம்பிதயானந்தா.

அதன்பின்னர்மற்றும்ஒருசந்தர்ப்பத்தில்வெளிநாடுகளில்ஒளிபரப்பாகும்தொலைக்காட்சிக்காகவும்அவர்என்னைகொழும்பில்ஒருநேர்காணலுக்காகஅழைத்துஅந்தநிகழ்ச்சியைஒளிபரப்பியவர்.

நண்பர்அனஸ்இளையஅப்துல்லா, ஏற்கனவே2008ஆம்தொடக்கத்தில்நான்லண்டன்சென்றிருந்தவேளையில்தீபம்தொலைக்காட்சிக்காகஒருநேர்காணலைநடத்திஒளிபரப்பியவர்.

அவர்தற்போதுலண்டனில்ஐ.பி.சி. தொலைக்காட்சியில்பணியாற்றுகிறார். அவரும்இந்தப்பயணத்தில்அழைத்திருந்தார்.

எமதுமூத்தஇலக்கியவாதியும்எனதுஅருமைநண்பருமானஅகஸ்தியரின்புதல்விநவஜோதியோகரத்தினமும்தொடர்புகொண்டு, நண்பர்நடா. மோகன்நடத்தும்லண்டன்தமிழ்வானொலியில்ஒருநீண்டநேர்காணலைஒழுங்குசெய்யவிருப்பதாகதெரிவித்திருந்தார்.

இவர்கள்அனைவரும்தொலைக்காட்சி, வானொலிஊடகத்துறையில்தேர்ச்சிபெற்றஅனுபவசாலிகள். அதனால்முன்னெச்சரிக்கைஅவசியமற்றதுஎன்பதில்ஆறுதலிருந்தது.

இலங்கையில்ஒருபிரபலதொலைக்காட்சிஎன்னைஒருநேர்காணலுக்குஅழைத்திருந்தபோதுஏற்பட்டகசப்பானஅனுபவங்களின்பின்னர், அங்குஅதன்பின்னர்செல்லும்சந்தர்ப்பங்களில்அத்தகையநேர்காணல்களைதவிர்த்துவிடுவதைவழக்கமாக்கிக்கொண்டேன்.

அந்தகசப்பானஅனுபவம்பற்றிஏற்கனவேஎழுதியுமிருக்கின்றேன்.

லண்டனில்Harrow என்னுமிடத்தில்ஒருஉணவுவிடுதியில்அங்கிருக்கும்கலை, இலக்கிய , ஊடகநண்பர்கள்மாதந்தோறும்சந்திக்கிறார்கள். கலந்துரையாடிவிட்டு இராப்போசனவிருந்துடன்விடைபெறுகிறார்கள். அதன்பின்னர்அடுத்தமாதம்மீண்டும்சந்திக்கிறார்கள்.

அத்தகைய ஒருசந்திப்புக்கு வருமாறுஇளையதம்பிதயானந்தாஅழைத்திருந்தார்.

லண்டனில்வதியும்எனதுமருமகள்ஜெயசித்திராஇந்திரனுடன்சென்றேன். மு. நித்தியானந்தன்தலைமையில்அந்தச்சந்திப்பு- கலந்துரையாடல்நடந்தது. நாழிகைஆசிரியர்மாலி .மகாலிங்கசிவம், ராகவன், மூத்தகவிஞர் ( அமரர்) காரைசுந்தரம்பிள்ளையின்புதல்வி – கவிதாயினிமாதவிசிவலீலன், இளையதம்பிதயானந்தா, அனஸ்இளையஅப்துல்லா, எஸ்.கே. ராஜன், நவஜோதிஉட்படசிலர்வந்திருந்தனர்.

மு. நித்தியானந்தன்உரையாற்றுகையில்தனக்கும்எனக்கும்இடையேநீடித்திருக்கும்நட்புறவையும்எவருடனும்முரண்அறுத்துபழகும்இயல்புகளையும்குறிப்பிட்டார். அத்துடன், எனதுசொல்லமறந்தகதைகள்நூலில்இடம்பெற்றசிலபதிவுகளையும்சிலாகித்துப்பேசினார்.

தனதுகூலித்தமிழ்நூலின்பிரதியும்தந்தார். பதுளையில்வெளியானகலைஒளிஇதழின்ஆசிரியர்முத்தையாவின்புதல்வரானநித்தியானந்தனை, 1972 ஆம்ஆண்டுமுதல்நன்குஅறிவேன். இவர், கொழும்புபல்கலைக்கழகத்தில்பொருளியல்துறைமாணவராகஇருந்தகாலப்பகுதியில்கொழும்பில்வெளியானபூரணிகாலாண்டிதழ்வெளியீட்டுநிகழ்வில்தான்முதல்முதலில்சந்தித்தேன். பின்னர்நித்தி, தினகரனில்சிறிதுகாலம்பணியாற்றியவேளையில்எங்கள்ஊரில்நாம்நடத்தியபாரதிவிழாவிற்கும், தேசியஒருமைப்பாட்டுமாநாட்டுபிரசாரக்கூட்டத்திற்குபேராசிரியர்கைலாசபதியுடனும்வருகைதந்திருந்தவர்.

யாழ்ப்பாணம்பல்கலைக்கழகவளாகம்தோன்றியதும்அங்குபொருளியற்துறைவிரிவுரையாளராகபணியாற்றினார். அதன்பின்னர்இவரதுவாழ்விலும்நிறையமாற்றங்கள்நேர்ந்தன.

1983வெலிக்கடைசிறையில்நடந்ததாக்குதலில்உயிர்தப்பினார். தமிழகம்சென்றதும்க்ரியாவின்தற்காலத்தமிழ்அகராதியின்பதிப்பிலும்பங்கேற்றவர். இற்றைவரையில்தொலைபேசி – மின்னஞ்சலில்தொடர்பிலிருக்கும்நண்பர்நித்தியானந்தன், எழுதியிருக்கும்கூலித்தமிழ்நூல்பற்றிபரவலானவிமர்சனங்கள்வெளிவந்துள்ளன.கனடாஇலக்கியத்தோட்டத்தின்விருதையும்இந்தநூல்பெற்றுள்ளது.

நித்தியானந்தன்,  இலங்கையிலிருந்த காலப்பகுதியில்1983இற்குமுன்னர்மலையக இலக்கியமுன்னோடிகள்என்.எஸ்.எம். ராமையா( ஒருகூடைக்கொழுந்து) தெளிவத்தைஜோசப் ( நாமிருக்கும்நாடே) சி.வி. வேலுப்பிள்ளை( வீடற்றவன்) ஆகியோரின்நூல்களைதனதுவைகறைபதிப்பகத்தின்மூலம்வெளிக்கொணர்ந்தவர்.

சிறந்ததிறனாய்வாளரானநித்தியானந்தன்,  இவ்வாறுபிற எழுத்தாளர்களின்நூல்களைவெளியிடுவதில்காண்பித்தஅக்கறைமுன்மாதிரியானது. எனினும்நித்தியின்நீண்டகாலதேடலிலும்ஆய்விலும்எழுதப்பட்டகூலித்தமிழ், 2014ஆம்ஆண்டில்தான்வெளிவந்தது.

கூலித்தமிழ்நூல்பற்றிதமிழகத்தைச்சேர்ந்தசித்தார்த்தன்சுந்தரம்மலையகமும்தமிழர்களும்என்னும்தலைப்பில்குறிப்பிட்டிருந்தவரிகளைஇங்குகாணலாம்.

தமிழகத்தின்குளிக்கரையைச்சேர்ந்தஅஞ்சுகம், யாழ்ப்பாணம்கைத்தடியில்வளர்ந்து, கொழும்புசிவனாலயத்தில் `பொட்டுக்கட்டிய’ தேவதாசியாகத்திகழ்ந்து, க. சின்னையாபிள்ளைஎன்றவர்த்தகரின்அபிமானஸ்திரீயாகவாழ்ந்து, `உருத்திரகணிகையர்கதாசாரத்திரட்டு’ என்னும்அரியஇலக்கியநூலினைஆக்கி, தனதுகுலகோத்திரத்தின் சரித்திரத்தைப்பதிவுசெய்தவரலாற்றுஆசிரியையாகக்கெளரவம்பெறுகிறார். இந்நூலாக்கத்திற்குஅஞ்சுகம்எடுத்தாண்ட 44 இலக்கியநூல்களின் விபரம்அவரதுதமிழ்ப்புலமையைப்பறைசாற்றுவதாகஅமைகிறது.
இந்துசனாதனப்புராண ப்புனைவுகளைமெய்யென்று நம்பிவிட்டபாங்குஇந்நூலின்அனைத்துப்பக்கங்களிலும்பளிச்சிடுகிறதுஎன்கிறார்மு. நித்தியானந்தன்.
தேவதாசி மரபை இல்லாதொழிக்கும் புரட்சிக்குரல்கள்தமிழகத்தில்பின்னாளில்வேகம்பெற்றது.  ஆனால்வலிமைவாய்ந்தசனாதனமரபிற்குப்பலியாகிப்போனஅஞ்சுகத்தின்தமிழ்ப்புலமைவரலாற்றில்அவருக்குத்தனித்துவமானஇடத்தைத்தேடிக்கொடுத்திருக்கிறதுஎன்கிறார்நூலாசிரியர்.
இந்நூலின்மூலம்மலையகத்தமிழர்கள்பற்றியபுதியபார்வையையும், அவர்களுடையஇலக்கியஆக்கங்களையும்அறிமுகப்படுத்தியிருப்பதோடுபலஅரியதகவல்களையும்ஆவணப்படுத்தியிருப்பதுஇதன்சிறப்பாகும். இதன்மூலம்சுந்தரமீனாளையும், கண்ணனின்காதலியையும், துரைமார்களுக்குஎதிராகஒலித்தகருமுத்துஅவர்களின்எதிர்ப்புக்குரலையும், கோப்பிக்கிருஷியின் 280 கும்மிப்பாடல்களைப்பற்றியும்இன்னும்அறிந்துகொள்ளவேண்டுமென்கிறஆர்வம்எனக்குள்எழுந்ததுபோலஇந்நூலைவாசிக்கும்ஒவ்வொருவரின்மனதிலும்எழும்என்பதில்ஆச்சரியமில்லை.  அப்படிஏற்பட்டால்அதுவேநூலாசிரியரின்உழைப்புக்குக்கிடைத்தக் ‘கூலி’ யாகும்.

லண்டன்Harrow  சந்திப்பில்தான்முதல்முதலில்எனதுநண்பரும்கவிஞருமான ( அமரர் ) கரைசுந்தரம்பிள்ளையின்புதல்விமாதவிசிவலீலாவைசந்தித்தேன். யாழ். திருக்குடும்பகன்னியர்மடம், யாழ். வேம்படிமகளிர்உயர்கல்லூரி, மற்றும்யாழ். பல்கலைக்கழகம்ஆகியவற்றில்கற்று, தமிழில்சிறப்புக்கலைபட்டமும் ,முதுதத்துவமாணிப்பட்டமும்பெற்றவர்.

கலை, இலக்கியம், கவிதைமுதலானதுறைகளில்ஈடுபட்டுள்ளஇவர்,   பொன்னாலைகிருஷ்ணபிள்ளையின்கவிதைகள்ஓர்ஆய்வுஎன்றநூலைவெளியிட்டவர். கம்பராமாயணக்கதையமைவும்கட்டமைப்பும்என்றதலைப்பில்ஆய்வேட்டையும்சமர்ப்பித்துள்ளார். தமிழர்புலம்பெயர்நாடுகளில்தமிழ்மொழிக்கல்விபோதனாமுறைமைகள்தொடர்பானஆய்வுகளிலும்ஈடுபடுபவர். இவரதுஇமைப்பொழுதுகவிதைநூல்லண்டனில்வெளியிடப்பெற்றது.

இந்தநூல்பற்றிதமிழககவிதாயினிகுட்டிரேவதிஇவ்வாறுபதிவுசெய்துள்ளார்:

மாதவி, தான்வாழும்நிலத்தில்தன்தலையின்வெளியில்மடித்துவைத்ததாய்நிலத்தின்வரைபடத்துடன்திரியும்ஒருபெண்ணாககாட்சிதருகிறார். முதாயியைப்போன்றுஎல்லோருக்காகவும்எழுந்துநிற்கிறார். துயரின்பேதலிப்பில்தனக்குள்தானேசுருண்டுகொள்கிறார். சொற்களால்எப்படியெல்லாம்துயரைவெல்லமுடியுமோஅப்படியெல்லாம்எழுந்துநின்றுபெருங்காற்றில்ஆடும்மரம்போலதொடமுடியாதவிண்ணைநோக்கிசீறிப்பேயாட்டம்செய்கிறார். என்றாலும்இவைஎல்லாவற்றையும்தாண்டிஎனைமிகவும்ஈர்த்தது, இக்கவிதைகளின்வழியாகஅவர்நமக்குக்காட்டும்நன்னம்பிக்கைமுனைகள், பெருவெளிச்சஇலட்சியங்கள். இரண்டு,  உட்பொருளுக்குஏற்றவாறுகவிதையின்வெவ்வேறுதொனிகளைக்கொடுத்துஈரமனதில்சொற்களைப்பதியச்செய்வது, வலுவானஇலட்சியமும்,பெண்சொற்களில்மண்டிக்கிடக்கும்வரலாற்றின்கொடுந்துயர்களையும், கவிதைகளால்அவற்றின்எல்லைகளைத்தொட்டுவிடமுடியும்என்றமுழுநம்பிக்கையும்கொண்டிருக்கும்ஒருகவியாகமாதவிஆகிநிற்கிறார். ஓர்இமைப்பொழுது, பெருங்காலமாககண்முன்னேவிரிகிறது.

லண்டன்Harrow  சந்திப்பில், சமகாலஇலக்கியபோக்குகள்பற்றியும்இலங்கைகவிஞர்கள்குறித்துதமிழகத்தவர்களின்பார்வைகள்குறித்தும்உரையாடினோம்.

இராப்போசனவிருந்துடன்அச்சந்திப்புநிறைவுபெற்றது.

( தொடரும்)

 

Share:

Author: theneeweb