அபாயகரமான முன்னுதாரணம்: உச்ச நீதிமன்றம் மற்றும் பாராளுமன்றக் கலைப்பு

                                           எஸ்.ஐ.கீதபொன்கலன்

பாராளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளாத அமைப்புகள் அதற்குச் சவால்விடுத்து உச்ச நீதிமன்றிடம் வழங்கிய வழக்கு ஒப்பீட்டளவில் மிகவும் இலகுவான ஒரு வழக்கு. அது ஒரு இலகுவான வழக்கு என்பது எதனாலென்றால் அரசியலமைப்புக்கு இறுதியாக மேற்கொள்ளப்பட்ட திருத்தம் (19) வெளிப்படையாகத் தெரிவிப்பது, பாராளுமன்றம் முதல் கூடிய திகதியில் இருந்து முதல் நான்கரை வருடங்கள் முடியும் வரை ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்று.

என்னைப் போன்ற பலரும் எதிர்பார்த்தது உச்சநீதிமன்றம் அதன் முதல் விசாரணையிலேயே விரைவான ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கும் என்று, ஏனென்றால் வழக்கின் எளிதான தன்மையின் காரணத்தால். அமைப்பின் நல்லொழுக்கம் மற்றும் ஸ்திரத்தன்மை என்பனவற்றை மீட்டெடுப்பதற்கு விரைவான ஒரு தீர்ப்பை வழங்குவதே நீதியானது என்று கருதப்பட்டது.

ஆனால் நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. முதலில் அது முடிவை டிசம்பர் 7ந் திகதிக்குப் பின்போட்டது மற்றும் வழக்கை விசாரிப்பதற்கு விரிவான நீதியரசர்களைக் கொண்ட ஒரு மன்றினை உருவாக்கியது. திரும்பவும் நீதிமன்றம் முடிவு அறிவிப்பதை டிசம்பர் 10க்கு ஒத்திவைத்தது. அதன் உட்குறிப்பு என்னவென்றால் நீதிமன்றின் கருத்துப்படி இது முடிவு செய்வதற்கு எளிமையானதும் நேரடியானதுமான ஒரு வழக்கு அல்ல என்பதாகும் வழக்கை முடிவு செய்வது கடினம் என்றால், தீhப்பு இரண்டு வழியிலும் வரலாம்.

நீதிமன்றின் தீர்ப்பு ஜனாதிபதிக்கும் மற்றும் குறிப்பிட்ட காலமான நான்கரை வருடங்களுக்கு முன்பே பாராளுமன்றத்தைக் கலைக்கும் அவரது முடிவுக்கும் சாதகமாக இருந்தால், கால தாமதமும் மற்றும் நீதிபதிகளின் விரிவாக்கமும் அதிர்ச்சியை குறைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட காரணிகளாகக் கருதப்படும். கணிசமான தொகையான மக்கள் நீதிமன்றம் இந்தக் கலைப்பை ஏற்றுக்கொள்ளாது என்றே எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாவதுடன் ஊழல் செய்ததாக நீதிமன்றத்தை விமர்சிப்பார்கள். தீர்ப்பை தாமதிப்பதின் மூலம் நீதிமன்றம் கூட மன்றின் அங்கத்தவர்களை அரசியல் அழுத்தத்தைச் சகித்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாக்கலாம் ஏனென்றால் ஏராளமான அரசியல் அதிகார வீரர்கள் உச்ச நீதிமன்ற முடிவை அடைவதற்கு செல்வாக்கை செலுத்த வேலைசெய்யலாம். எனவே நீதிமன்றின் இறுதி முடிவு அவர்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து அமையும்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை நிலைநிறுத்தும் ஒரு முடிவு ஒரு மோசமானதும் மற்றும் ஆபத்தானதுமான ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கும். நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகள் வெளிப்படுத்துவது இந்த வழக்கில் பிரதிவாதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட பிரதான வாதங்களில் ஒன்று ஒரு சிக்கலான நிலைப்பாட்டில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு ஜனாதிபதியின் செயற்பாடு முக்கியமானதாக இருந்தது என்பதாகும். இந்த சட்டவாதம் வெளிப்படுத்துவது என்னவென்றால் பாராளுமன்றைக் கலைத்தது சட்ட விரோதமும் அரசியலைமைப்புக்கு விரோதமாக இருந்தாலும் கூட அந்த நடவடிக்கையை அனுமதிக்க வேண்டும் என்கிற அவர்களது நம்பிக்கையை. அத்தகைய ஒரு வாதத்தை அனுமதிப்பது நீண்ட கால ஓட்டத்தில் நாட்டுக்கு அழிவை உண்டாக்கும் என்பதை நிரூபிக்கும்.

எனக்குத் தெரிந்தவரை எந்த ஒரு அரசியல் தலைவரும் அதிகாரத்தைச் சட்ட விரோதமாக கைப்பற்றுவது பற்றித் தெரிவிப்பது அவன் அல்லது அவள் அதைச் செய்வது ஒரு சுய சேவை நிகழ்ச்சி நிரலை ஊக்குவிப்பதற்கே. சட்ட விரோதமாக அதிகாரத்தைக் கைப்பற்றும் செயற்பாடுகள் அனைத்தையும் நியாயப்படுத்துவது தேசிய நலன்களுக்கு சேவையாற்றும் அவசியத்துக்காக என்று. தற்போதைய ஸ்ரீலங்காவின் நிலமையும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆகவே இந்தச் செயற்பாடு அனுமதிக்கப்பட்டால், எதிர்காலத்தில் வரும் ஸ்ரீலங்கா ஜனாதிபதிகள் தாங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் எந்தக் கட்டுப்பாடுமின்றி பாராளுமன்றத்தைக் கலைப்பதோடு மக்களின் இறையாண்மையை கேலிக்கிடமாக்கி விடுவார்கள்.

குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு பாராளுமன்றைக் கலைப்பதை அவர்கள் ஒன்று அல்லது மற்றொரு பிரச்சினையை பயன்படுத்தி நியாயப்படுத்துவதுடன் அதற்கு நெருக்கடி என்கிற வர்ணத்தையும் தீட்டுவார்கள். எனவே பாராளுமன்றக் கலைப்பை நியாயப்படுத்தும் ஒரு முடிவு ஜனாதிபதிக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்குவதாகும் அதனால் பாராளுமன்றம் பிரதான நிறைவேற்றுனர் மீது எந்தவித கட்டுப்பாட்டையும் பிரயோகிக்க இயலாது. பாராளுமன்றமும் தான் கலைக்கப்படலாம் என்கிற தொடர்ச்சியான அச்சத்தின் கீழேயே இருக்கும் ஏனென்றால் எந்தவித சவாலும் ஒரு புதிய தேர்தலைச் சந்திக்க அதனை நிர்ப்பந்திக்கும். இது ஏற்கனவே சக்தி வாய்ந்ததாக உள்ள ஜனாதிபதி முறையை ஒரு அரை சர்வாதிகார நிறுவனமாக மாற்றுவதுடன் ஜனாதிபதிக்கும் மற்றும் பாராளுமன்றத்துக்கும் இடையில் உள்ள அதிகார சமநிலையை தீர்க்க முடியாத பாதிப்புக்கு உட்படுத்தும்.

ஸ்ரீலங்கா எப்போதும் ஒருவகையான நெருக்கடிக்குள் சிக்கிவிடுகிறது என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டத் தேவையில்லை. அது எதிர்ப்பு பேரணிகளும் மற்றும் வேலைநிறுத்தங்களும் நிறைந்த ஒரு பூமி. பாராளுமன்றத்தை கலைக்கும் எண்ணம்கொண்ட ஒரு ஜனாதிபதிக்கு அந்த நோக்கத்தை எளிதாக நிறைவேற்றுவதை நியாயப்படுத்தும் உந்து சக்தியாக ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அதற்கு மேலும் ஒரு நெருக்கடியை உருவாக்கக்கூட முடியும். தற்பொழுது நிலவும் பிரச்சினைகூட அப்படி உருவாக்கப்பட்ட ஒரு நெருக்கடிதான்.

நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டியது, இரண்டு வெவ்வேறு வகையான நெருக்கடிகள்தான் தற்போதைய குழப்பமான நிலையைத் தோற்றுவித்துள்ளன என்பதை. மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்டபோது, பாராளுமன்றம் ஒரு பிரச்சினையான சூழ்நிலையைக் கொண்டிருக்கவில்லை. கடந்த ஏப்ரலில் ரணில் விக்கிரமசிங்கா பொதுசன ஐக்கிய முன்னணியின் (யுபிஎப்ஏ) வாக்குகள் இல்லாமலேயே பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்திருந்தார். எனினும், வெளியில் இருந்த சூழ்நிலைதான், நாடு ஒரு நெருக்கடியில் உள்ளது  சிறிசேன மற்றும் ராஜபக்ஸவை தலைமையாகக் கொண்ட ஒரு புதிய அதிகாரக்கட்டமைப்பு அதைக் காப்பாற்றவேண்டும் என்று வாதிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

ஸ்ரீலங்கா ரூபாயின் மதிப்பிறக்கம் மற்றும் நாட்டின் பொருளாதார துயரங்கள் ஆகியவைதான் விக்கிரமசிங்கா தலைமையிலான நிருவாகத்தை பதவியில் இருந்து அகற்றி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான புதிய ஆட்சியை நிறுவுவதற்கு சிறிசேன – ராஜபக்ஸ இரட்டையாகளுக்கு மேற்கோள் காட்ட உதவியுள்ளன. அரசாங்கத்தில் ஊழல்கள் இடம்பெற்றதாகச் சொல்லப்பட்டதும் கணிசமானளவு விவாதிக்கப்பட்டன. உண்மையில் ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் பாராளுமன்றில் தேவையான எண்ணிக்கையை கொண்டிருக்காத காரணத்தினால்தான் தேசிய பேரவையில் அவமானமான குழப்பங்கள் ஏற்பட வழிவகுத்தன. தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாமை, மற்றும்; ஜனாதிபதி சிறிசேன மற்றும் ராஜபக்ஸ அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் சவால்களுக்கு முகம் கொடுக்க இயலாமை ஆகியவைதான் இறுதியாக ஜனாதிபதியை பாராளுமன்றினைக் கலைப்பதற்கு கட்டாயப்படுத்தியது.

ஆகவே, பிரதிவாதிகள் உச்ச நீதிமன்றில் நெருக்கடியைக் கையாள்வதற்கு பாராளுமன்றத்தை கலைப்பது அவசியம் என வாதிடும்போது, அவர்கள் எந்த நெருக்கடியைப் பற்றிப் பேசுகிறார்கள்? நாட்டில் நிலவும் நெருக்கடியைப் பற்றியா அல்லது பாராளுமன்றத்தில் நிலவும் நெருக்கடி பற்றியா?
பாராளுமன்றத்தில் உள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நிரூபிக்கத்தக்க பெரும்பான்மை கொண்ட ஒரு கட்சியை நிருவாகத்தை தொடர அனுமதித்து மற்றும் நாலரை அல்லது ஐந்து வருடங்களின் பின்னர் தேர்தலை நடத்தலாம். ஜனாதிபதியின் ஜனநாயகமற்ற நகர்வுதான் பாராளுமன்ற நெருக்கடியைத் தூண்டிவிட்டது. எனவே தானாக உருவாக்கிய ஒரு நெருக்கடிக்கு ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தைச் சாதகமாகப் பயன்படுத்த முடியாது. பாராளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானத்தை உறுதிப்படுத்துவது தவறு செய்தவர்களுக்கு பரிசு வழங்குவது போலாகிவிடும். மேலும் நெருக்கடிகள் உருவாக்கப்பட்ட வழிகளும் மற்றும் பாராளுமன்றத்தை வெற்றிகரமாகக் கலைப்பதற்கு அவற்றைப் பயன்படுத்துவதும் வருங்கால மீறல்களுக்கான ஒரு திட்டமாக பதியப்பட்டுவிடும்.

எனவே ஜனாதிபதி சிறிசேனாவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுக்காக வழங்கப்படும் தீர்ப்பு ஸ்ரீலங்காவின் நீண்டகால வரலாற்றில் ஜனநாயகத்தை பொறுத்தவரை ஒரு மைல் கல்லாக அமையும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share:

Author: theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *