திருகோணமலையில் இன்று ஹர்த்தால் – இ.போ.ச பஸ் மீதும் தாக்குதல்

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இன்று திருகோணமலையில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்ட நிலையில், பஸ் போக்குவரத்து இடம்பெறவில்லை.

முஸ்லிம் பாடசாலைகள் ரமலான் கால விடுமுறையில் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் தமிழ் பாடசாலைகள் நடைபெறவில்லை.

இந்நிலையில் சில அசம்பாவித சம்பவங்களும் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளன.

கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று சர்தாபுர பகுதியில் கல்வீச்சுக்கு இலக்காகியது. மற்றும் 3ஆம் கட்டை பகுதியில் போக்குவரத்தை மறித்து டயர் எரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மூதூர் நோக்கி சென்ற பஸ்ஸும் கல்வீச்சுக்கு இலக்காகியது. எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

எவ்வாறாயினும் முஸ்லிம் பிரதேசங்கள் வழமை போன்று காணப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb