2018 ஆம் ஆண்டில் போதைப்பொருள்: 95,797 பேர் கைது

கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு சுற்றி வளைப்புக்களின் போது 95,797 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் 736 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் 40,860 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுதவிர, 4585 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் அது தொடர்பில் 54,575 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின் போது 19 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சுற்றி வளைப்பு தொடர்பில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர, 13 கிலோ கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 6 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப் பொருளும் மீட்கப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 345 பேர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb