மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள்…

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி, பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 3 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் இராணுவத்தினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறை மற்றும் சிற்றுண்டிச் சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் ஏனைய சில புகைப்படங்கள் இருந்ததாக தெரிவித்து, மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரும், சிற்றுண்டிச்சாலை உரிமையாளரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள், எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மாணவர்களை விடுவிப்பதற்காக அவர்களுக்கு ஆதரவான தரப்பினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Share:

Author: theneeweb