வடக்கில் 102 பாடசாலைகளில் 200 மேற்பட்ட சிவில் பாதுகாப்பு படையினர் – சிவில் பாதுகாப்புத் திணைக்களம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையையடுத்து வடக்கில் 102 பாடசாலைகளில் 200 க்கு மேற்பட்ட சிவில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

பாடசாலைகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் ஆண் பெண்கள் என்ற வித்தியாசம் இன்றி சிவில் பாதுகாப்பு படையினர் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கில் பலராலும் சிவில் பாதுகாப்பு படையில் இணைந்து கொண்டவர்களை விரோதிகளாக பார்க்கப்பட்டு வந்த போதும்தமது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு பல எதிர்புப்புக்களுக்கும் மத்தியில் துணிவாக செயற்பட்டவர்கள். இன்று சகலராலும் வரவேற்பதற்கு ஏதூவாக சிவில்பாதுகாப்பு படையில் உள்ளவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் தற்போது 102 பாடசாலைகளுக்கு மேல் 200 அதிகமாண சிவில்பாதுகாப்பு படைப் பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. என அச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb