செய்யாத குற்றத்திற்கா சிறையிலிருந்த முன்னாள் போராளி அஜந்தன் கவலை

செய்யாத குற்றத்துக்காக ஐந்து மாதகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால், விடுவிக்கப்பட்டதன் பின்னரும் தாம் பெரும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதாக, முன்னாள் போராளி கதிர்காமதம்பி ராசகுமாரன் என்ற அஜந்தன் கவலை வெளியிட்டுள்ளார்.

வவுணத்தீவில் கடந்த ஆண்டு இரண்டு காவற்துறை அலுவலர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், அவர் கடந்த நொவம்பர் மாதம் 29ம் திகதி கைது செய்யப்பட்டார்.

எனினும் கடந்த ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர், அதுதொடர்பில் கைதானவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்த கொலைக்கும் அஜந்தனுக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

41 வயதான அஜந்தன், 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தப் பின்னர், 2 வருடங்கள் வவுனியா – நெலுங்குளம் முகாமில் பாதுகாப்பு தரப்பினரால் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்.

முன்னாள் போராளியாக தாம் ஏற்கனவே பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்த நிலையில், தற்போது சிறைக்கு சென்று திரும்பியப் பின்னர் மேலும் பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அஜந்தனின் மனைவியும், பிள்ளைகளும் அஜந்தனின் விடுதலை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டனர்.

Share:

Author: theneeweb