இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக் வலைத்தளத்தில்கருத்தை பதிவேற்றிய வர்த்தகர் விளக்கமறியலில்

இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக் வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் சிலாபம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ் குறித்த சந்தேகநபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் பேஸ்புக் வலைத்தளத்தில் தெரிவித்த கருத்தை அடுத்து, சிலாபம் நகரில் நேற்று தீவிரநிலை ஏற்பட்டது.

பின்னர் சிலாபம் நகரில் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இன்று அதிகாலை 4 மணிவரையில் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதேவேளை, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் விரிவுரைகள் அடங்கிய 326 இறுவட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட, அநுராதபுர ஊடகவியலாளர் எதிர்வரும் 27ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Share:

Author: theneeweb