கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் ஆலய தற்கொலை குண்டு தாரியின் தலையை இனங்கண்ட பெற்றோர்

உயிர்த்த ஞாயிறன்று கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட அலவுதீன் அஹமட் முவாத்தின் தலை பகுதி தனது மகனுடையது என அவரின் பெற்றோர் இனங்கண்டுள்ளனர்.

குறித்த தற்கொலை குண்டுதாரியின் மரண விசாரணை கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மட்டக்குளி பகுதியை சேர்ந்த தற்கொலை குண்டுதாரியின் தந்தை தனது சாட்சியில், உயிரிழந்துள்ள 22 வயதான தனது மகன் சட்டம் குறித்த ஆரம்ப கல்வியை முடித்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த தனது உறவினர் ஒருவரின் மகளை திருமணம் செய்துள்ள அவர், பின்னர் ஏப்பிரல் மாதம் நடுப்பகுதியில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், பின்னர் தனது மகன் உயிரிழக்கும் வேளையிலும் தம்முடன் தொடர்பு கொள்ளவில்லை எனவும் தந்தை தெரிவித்துள்ளார்.

இதனுடன் தற்கொலை குண்டுதாரியின் தாய் மற்றும் அவரின் இரண்டு உறவினர்களும் நீதிமன்றில் இன்றைய தினம் சாட்சி வழங்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb