அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையில் இதுவரை 60 பேர் கையொப்பம்…

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணையில் இதுவரை 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு – விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அவநம்பிக்கை பிரேரணையில் இன்றைய தினத்திற்குள் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதையடுத்து, சபாநாயகரிடம் நேரம் ஒன்றைக் கோரி, அவரிடம் குறித்து அவநம்பிக்கை பிரேரணையை கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb