ஸ்ரீலங்கா கரையை விட்டு படித்த இளைஞர்கள் வெளியேறுகிறார்கள்: இது மூளையின் வடிகாலா அல்லது மூளையின் ஆதாயமா?

டபிள்யு.ஏ.விஜேவர்தன   —

வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலைவாய்ப்பினைத்தேடி நாட்டை விட்டு வெளியேறும் கல்விமான்களான இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சம்பவம் தொடர்பாக பலரும் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளார்கள். உலகவங்கி அண்மையில் வெளியிட்ட “ஸ்ரீலங்காவின் அபிவிருத்தி மேம்படுத்தல் 2019” என்கிற வெளியீட்டில் உலக வங்கி அவதானித்துள்ளதாகக் குறிப்பிடும் ஸ்ரீலங்காவின் தொழிலாளர் சக்தியின் பின்னணியில் விசேஷமாக சிக்கல் நிறைந்த ஒரு பிரச்சினையாகக் காணப்படுகிறது. இதற்கு மேலாக, தொழிலாளர்கள் ஸ்ரீலங்காவுக்கு தங்கள் பங்கினை வழங்குவது வரலாற்று ரீதியாக மிகவும் குறைவாகவே உள்ளது, 15 வயதுக்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த மக்களில் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர்கள் மட்டுமே தங்கள் சேவையினை சந்தைக்கு வழங்குகிறார்கள். ஆண் பங்களிப்பாளர்கள் சுமார் 72 விகிதமாக உள்ள அதேவேளை பெண் பங்களிப்பாளர்கள் மிகவும் குறைவாக அதாவது சுமார் 35 விகிதமாக உள்ளனர். அவர்களில், 25 மற்றும் 40 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே தொழிலாளர்களில் பெரும்பங்கை வகிக்கிறார்கள், அந்த வயதுள்ள குழுக்களே கிட்டத்தட்ட நாட்டின் மொத்த மக்கட் தொகையினையும் உருவாக்கியுள்ளார்கள். ஆகவே அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பொருளாதாரத்க்கு பாரிய இழப்பாகக் கருதப்படுகிறது. எனினும் இலங்கை மத்திய வங்கி அதன் 2018ம் ஆண்டு வருடாந்த அறிக்கையில், நாடு வெளிநாட்டில் இருந்து பெறப்படும் வருமானத்தின் உச்ச அதிகரிப்பை அடைவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கட்டமைப்பினை திறனற்ற மற்றும் பாதி திறனுள்ள பிரிவுகளில் இருந்து முழுத் திறனுள்ள பிரிவுக்கு மாற்றவேண்டியது அவசியம் என வலியுறுத்துகிறது. தற்போது வருடாந்த புலம்பெயாந்த தொழிலாளர்களில் 55 விகிதத்தினர் திறனற்ற மற்றும் பாதி திறனுள்ள பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ள அதேவேளை 32 விகிதமானவர்கள் முழுத் திறனுள்ள பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள். எனினும் இது சம்பந்தமான விவாதம் தொடர்கிறது மற்றும் சிலநேரங்களில்ல சிலர், ஸ்ரீலங்கா அதன் தொழிலாளர்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்பினை முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்று கூட பரிந்துரைக்கிறார்கள்.

இந்த நடைமுறைக்கு எதிரான எதிர்ப்பு, பொதுவாக மூளை வடிகால் என அறியப்படுகிறது, பொருளாதார மற்றும் பொருளாதாரமற்ற இருவகைக் காரணங்களையும் கொண்டுள்ளது.

பொருளாதார காரணங்கள்

மூளை வடிகாலுக்கு எதிராக விடுக்கப்பட்ட காரணங்கள் பின்வரும் வடிவத்தைக் கொண்டுள்ளன.

படித்த இளைஞர்கள்தான் நாட்டின் செல்வத்தை உருவாக்கும் தூண்கள். அவர்கள் நாட்டின் கரையை விட்டு மற்ற நாடுகளுக்கு வேலைக்காகச் செல்லும்போது அவர்களின் தாய்நாடு அவர்களின் திறமைகளைப் பயன்படுத்தி மேலும் செல்வத்தை உருவாக்கும் அதன் திறனை இழந்து விடுகிறது. எனவே அவர்களை ஊட்டி வளர்ப்பதற்கான சிரமங்களை அனுபவித்த நாட்டுக்குப் பதிலாக, அதற்காக எதுவுமே செய்யாத மற்றைய நாடுகள் பயனாளிகளாகி விடுகின்றன. பொருளாதார வல்லுனர்கள் இந்த நிகழ்வினை இலவச ஆதாயம் பெறுதல் அல்லது இலவச சவாரி என்றழைக்கிறார்கள். ஏழை நாடுகள் ஏழையாகவே மாறி விடுகின்றன ஏனென்றால் அவை பணம் செலவு செய்து படிக்கவைத்து உருவாக்கிய இளைஞர்களின் திறமையினால் அவைகளால் பயன்பெற இயலாமல் போய்விடுகிறது. அதன் விளைவாக தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி ஏற்றுதி செய்யத்தக்க உற்பத்திகளை உருவாக்கிய நிறுவனங்களால் அவற்றை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. படித்த இளைஞர்களை பணிக்கு அமர்த்தி அரசாங்கம் தனது திறனை உயர்த்தியுள்ள போதிலும் அவர்களால் மக்களுக்கு முறையான சேவை செய்ய முடியவில்லை. அரசாங்க மற்றும் தனியார் வைத்தியசாலைகள் இரண்டினாலும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியவில்லை, ஏனென்றால் தகுதிவாய்ந்த மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. பெறியியலாளர்களின் பற்றாக்குறையினால் பெறியியல் நிறுவனங்காளால் புதிய கட்டமைப்புகளை உருவாக்க முடியவில்லை. பாடசாலைகளில் விசேடமாக கணிதம், விஞ்ஞ}னம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிக்க முடியவில்லை ஏனென்றால் தகுதியான ஆசிரியர்களுக்கு அங்கு பற்றாக்குறையாக உள்ளது. இந்த நிலையில் மூளைசாலிகளின் வெளியேற்றம் முழு பொருளாதார வாழ்வினையும் மோசமாக பாதித்துள்ளதுடன் பொருளாதாரத்தின் வளர்ச்சித் திறனையும் தடுத்துள்ளது.

பொருளாதாரம் அல்லாத வாதங்கள்

மூளை வடிகாலுக்கு எதிரான பொருளாதாரம் அல்லாத வாதங்கள் தேசப்பற்று மற்றும் சமூக அடிப்படையில் தயாரிக்கப் பட்டுள்ளன.

தேசத்தின் இலவசக் கல்விக் கொள்கையின் கீழ் பெரும் செலவில் இளைஞர்களுக்கு நாடு கல்வியறிவை வழங்கியுள்ளது. ஆகவே அவர்கள் நாட்டிற்குச் சேவை செய்வதின் மூலம்; அதனைத் திருப்பிச் செலுத்தவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் சமூகத்துக்கு அவர்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது. அவர்களது வளர்ச்சிக்கு எதுவும் செய்யாத வேறு நாடுகளுக்கு அவர்கள் சேவையாற்றுவது அவர்கள் பக்கத்தில் உள்ள தேசப்பற்றற்ற செய்கையாகும். மேலும்,வளர்ச்சியடைந்த நாடுகள் அவர்களுடைய தொழில் திறமையை குறைவான வேதனத்தில் பெற்றுக்கொண்டு, அதன்மூலம் ஏற்றுமதி செய்யத்தக்க உற்பத்திகளை உருவாக்கி அவற்றை அNது வறிய நாடுகளுக்கு செயற்கையாக நிர்ணயித்த உயர்ந்த விலைகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. எனவே வறிய நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளால் இரண்டு முறை சுரண்டப்படுகின்றன: முதலாவது வறிய நாடுகளின் தொழில் திறமையை திருடுவதின் மூலமும், இரண்டாவதாக அத்தகைய தொழில் திறமையைப் பயன்படுத்தி உருவாக்கிய பொருட்களை செயற்கையாக நிர்ணயித்த விலை மூலம் விற்பனை செய்வதின் மூலமும் இது நிகழ்கிறது.

சமூக அடிப்படையில் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் படித்த இளைஞர்கள் அந்த நாடுகளால் நன்றாக நடத்தப்படுவதில்லை. அவர்களில் பலர் தங்கள் திறனுக்கும் மற்றும் திறமைக்கும் முற்றிலும் தொடர்பில்லாத வேலைகளில் அமர வேண்டியுள்ளது. பல சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில், நரம்பியல் நிபுணர்களாக தேர்ச்சி பெற்றவர்கள் கூட, தங்கள் வாழ்க்கையினை நிலைநிறுத்துவதற்காக ஆரம்ப கட்டங்களில் வாடகைக் கார் ஓட்டுனர்களாக பணி புரிநதுள்ளதாக அடிக்கடி சொல்லப்படுகிறது. இது ஒரு வகையான பாகுபாடு, இந்த படித்தவர்கள் தங்கள் சொந்த நாட்டில் இந்த மாதிரியான ஒரு நிலைக்கு கீழிறங்கியிருக்க மாட்டார்கள். ஆகவே வறிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்வந்த நாடுகள் அவர்களை நடத்தும் இரட்டைத்தர நிர்ணய முறையினால் பாதிப்படைந்துள்ளார்கள்.

எனவே, இதன் காரணமாக பலரும் பரிந்துரைப்பது, அரசாங்கம் படித்த இளைஞர்கள் வேலைகள் போன்ற தேவைகளுக்காக நாட்டை விட்டு வெளியேறுவதை தடை செய்ய வேண்டும் என்று.

தேசப்பற்றற்ற செய்கை என்கிற வாதம் சரியானதா?

இந்த தேசப்பற்றற்ற செய்கை எனும் வாதம், ஒன்றுக்கொன்று தொடர்பான இரண்டு காரணங்களை அடிப்படையாகக் கொண்டது, ஒரு விததத்தில் அது சொல்வது, ஒருவர் தனது நாட்டுக்குச சேவை செய்ய வேண்டுமாயின் அவர் தனது நாட்டு எல்லைக்குள் வசிக்க வேண்டும் என்று. அதற்காக அது வெளியிடும் காரணம் தனது நாட்டின் அரசாங்கத்துக்கு அல்லது தனது சக குடிமகன் ஒருவனுக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதன் மூலமே ஒருவர் தனது நாட்டுக்குச் சேவையாற்ற முடியும் என்று. வேறு எந்த வழியிலும் வாழ்வாதாரத்தை சம்பாதிப்பது தேசப்பற்ற செயலாகும். ஒரு உற்பத்தியை நிறைவு செய்வதற்கு பல்வேறு வகையான உற்பத்தி நடவடிக்கைளை மேற்கொள்ளும் ஒரு ஒற்றை நாட்டுக்கே இந்த வாதம் சரியாக இருக்கும். ஆனால் இன்று ஒரு உற்பத்தி இடம்பெறுவது உலகத் தொழிற்சாலைகள் என்று அழைக்கப்படும் இடங்களிலேயே. இந்தத் தொழிற்சாலைகள் வெவ்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்ட வெவ்வேறு பொருட்களைக் கொண்டு இறுதி விளைவினை ஒருங்கிணைக்கிறது. ஆகவே இன்றைய ஒரு உற்பத்திப் பொருள் ஒரு ஒற்றை நாட்டுக்குச் சொந்தமானதல்ல. இன்று பல நாடுகளி; உற்பத்தி செய்த பொருட்களைக் கொண்டு இறுதி விளைவு உற்பத்தி செய்யப்படுவதால் இந்தப் பொருள் எனது சொந்த உற்பத்தி என்று எந்தவொரு நாடும் உரிமை கொண்டாட முடியாது.

எடுத்துக்காட்டாக, ஒரு சட்டை ஸ்ரீலங்காவில் தயாரிக்கப்பட்டது என்கிற முத்திரையை கொண்டிருந்தாலும் அது ஸ்ரீலங்காவுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அது தயாரிக்கப்பட்ட துணி சீனாவில் இருந்தும் பொத்தான்கள் இந்தியாவிலிருந்தும், நூல் மலேசியாவில் இருந்தும், அதன் வடிவமைப்பு பிரான்சில் இருந்தும், தையல் இயந்திரங்கள் யப்பானில் இருந்தும் வந்திருக்கலாம் அதை தைப்பதற்கு வேண்டிய மின்சாரத்தை தயாரிப்பதற்கான எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்லாம். பொருளாதார நிபுணர்கள், இறுதி மதிப்பை கூட்டுவதைக்கொண்டு – அதாவது வேலையாட்களுக்கு வழங்கப்பட்ட வேதனம், உரிமையாளருக்கான ஊதியம், வங்கிகளுக்குச் செலுத்தப்பட்ட வட்டி மற்றும் நில உரிமையாளருக்குச் செலுத்தப்பட்ட வாடகை என்பன – அது உண்மையாக ஸ்ரீலங்காவுக்குச் சொந்தமானது என அழைக்கிறார்கள்.

ஸ்ரீலங்கா விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அரிசி முற்றிலும் ஸ்ரீலங்காவுச் சொந்தமானதா? பிரபலமான கண்ணோட்டம் “ஆம்” என்று பதிலளிக்கிறது, ஆனால் உண்மை எதிர்மாறானது. ஸ்ரீலங்காவுக்குச் சொந்தமானதெல்லாம் விவசாயிகளின் உழைப்பு, விதை நெல்லின் மதிப்பு, நீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட நிலம் மற்றும் இதர பங்காளர்களால் வழங்கப்படும் நெல் குற்றல், மொத்த விற்பனை, சில்லறை விற்பனை போன்ற சேவைகள் என்பன மட்டுமே, அரிசி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இதர உள்ளீடுகள் மற்றைய நாடுகளில் இருந்து வந்தவையாகும்: ஈரானில் இருந்து உரம், உழவு இயந்திரங்கள், பார ஊர்திகள் மற்றும் நெல் குற்றும் இயந்திரங்கள் என்பன யப்பான் மற்றும் சீனாவில் இருந்தும் எண்ணெய் மலேசியாவில் இருந்தும் பூச்சிநாசினிகள் ஜேர்மனியில் இருந்தும் வந்தவையாகும். எனவே ஸ்ரீலங்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒவ்வொரு மணி அரிசியும் ஒரு உலகளாவிய உற்பத்தியாகும் அதன் இறுதி வடிவம் மட்டுமே ஸ்ரீலங்கா மண்ணில் காணப்படுகிறது.

எனவே இன்றைய உற்பத்திகள் யாவும் தேசியமானவை அல்ல, ஆனால் உலகளாவிய உற்பத்திகள் ஆகும்.

ஆகவே ஒரு நபர் ஸ்ரீலங்காவிலோ அல்லது வேறிடத்திலோ வேலை செய்கிறார் என்பது முக்கியமானது அல்ல. நாட்டையோ, முதலாளியையோ பொருட்படுத்தாமல் உற்பத்திச் சற்கிலியில் அவர் வேலை செய்யும் வரை, அவர் ஸ்ரீலங்காவுக்கும் சேவை செய்கிறார் என்றே கருதப்படும்.

படித்த ஸ்ரீலங்கா இளைஞர்களை வெளிநாடுகளில் வேலை செய்ய அனுமதிப்பது ஒரு பாவமா?

வெளிநாடுகளில் பணியாற்றும் ஸ்ரீலங்காவின் படித்த இளைஞர்கள் நாட்டுக்கு பல நன்மைகளை வழங்குகிறார்கள்.

முதலாவதாக ஸ்ரீலங்கா அதன் நன்கு நிறுவப்பட்ட உயர் கல்வி இயந்திரத்தின் மூலம், கணக்காளர்கள், மருத்துவாகள், பொறியியலாளர்கள், மற்றும் மேலாளர்கள் போன்ற தொழில் நிபுணர்களை பெரிய அளவில் உற்பத்தி செய்கிறது. இந்த அனைத்து வகை உற்பத்தித் தொழிலாளர்களையும் உள்வாங்கும் அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் போதுமானளவு விரிவடையவில்லை எனவே நாட்டில் உள்ள படித்த இளைஞர்களிடையே அனைத்து துணைப் பிரிவுகளிலும் வேலையின்மை உயர்ந்த அளவில் உள்ளது. அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்காவிட்டால், அவர்கள் சமூக விரோதிகளாகவும் மற்றும் பொருளாதார ரீதியில் சுமையாகவும் மாறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். அது சமூக அழுத்தங்களுக்கு வழி வகுக்கும் இல்லையெனில் ஒத்திசைவான சமூக வாழ்வினை துண்டு துண்டாகக் கிழ்த்துவிடும். எனவே படித்த இளைஞர்களுக்கான வெளிநாட்டு வெலைவாய்ப்புகள் சமூக அழுத்தங்களைத் தணிப்பதற்காக திறந்து விடப்படும் ஒரு ‘பாதுகாப்பு வால்வு’ ஆகும்.

இரண்டாவதாக, பொருளாதாரம் படிப்படியாக குறைவடைந்து கீழநோக்கிச் சரியும்போது, இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் ஒரு ‘அதிர்ச்சி தாங்கியாக’ செயற்படுகிறது. வருடத்துக்கு வருடம் பொருளாதாரம் மேம்படும்போது அது மக்களுக்கு அதிகளவான இலாபகரமான தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. எனினும் அது தலைகீழாக மாறும்போது தொழில்களுக்குத் தட்டுப்பாடு மற்றும் குறைவான ஊதியம்பெறும் நிலை ஏற்படுகிறது. அத்தகைய தற்காலிக அதிர்ச்சியில் தேவைக்கு அதிகமாக உள்ள ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்வதற்கு சில வசதிகளை ஏற்படுத்த வேணடியிருக்கும். இந்த சந்தர்ப்பங்கள் உள்நாட்டுத் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் வேலை செய்வதற்கான வசதியை ஏற்படுத்துவதடன் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை உறிஞ்சுவதற்கும் உதவியாக இருக்கும்

மூன்றாவதாக மற்ற எந்த மூலதனப் பிரிவினைப் போலவே தொழிலாளர்களும் ஒரு மனித மூலதனம் இது வேகமாக மாறுபடும் குறைபாடு உடையது. உலகின் அறிவுத் தளம் வேகமாக மாறுதலடைகிறது, இது பழைய தொழிலாளர்கள் தாங்கள் மீண்டும் புதியனவற்றைக் கற்றுக்கொள்ளாவிட்டால், நவீன வேலைகளை பூர்த்தி செய்வதற்கு அவர்களைத் தகுதி அற்றவர்களாக்கியுள்ளது. அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தானாகவே புதிய தொழில்நுட்பம்,சிறந்த வேலை நடைமுறைகள் மற்றும் நவீன மேலாண்மை நுட்பங்களை வெளிப்படுத்துகிறார்கள். ஆகவே இது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வேலை வாய்ப்பினைத் தேடும் படித்த இளைஞர்களுக்கு கற்றுக்கொள்வதற்கு எற்ற ஒரு பல்கலைக்கழகமாக சேவையாற்றுகிறது. இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அத்தகைய பல தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பியுள்ளார்கள், அவர்கள் வெவளிநாடுகளில் பணியாற்றிய வேளைகளில் தாங்கள் கற்றுக்கொண்ட பல புதிய திறமைகளையும் தங்களுடன் கொண்டுவந்துள்ளார்கள். உண்மையில் தொழிலாளர்களின் தரத்தை உயாத்துவது மூலம் சொந்த நாட்டின் பொருளாதாரத்தின் பெறுமதியையும் அது உயாத்துகிறது.

நான்காவதாக ஊதாரி மகன் திரும்பி வந்ததைப் போல, அபிவிருத்தியடைந்த நாடுகளில் உயர் தொழில்நுட்பம் மற்றும் உயர் தொழில் திறமை போன்றவற்றைக் கொண்டிருந்த தொழிலாளர்கள், தங்கள் சேமிப்புகள் மற்றும் தொழில் திறமைகளுடன் தங்கள் சொந்த நாடுகளில் உலக தரத்திலான வியாபாரங்களை ஆரம்பிக்கும் எண்ணத்துடன் சொந்த நாட்டுக்குத் திரும்பி வரத் தொடங்கியுள்ளார்கள். அவர்கள் பெற்றுள்ள அனுபவங்கள் மற்றும் வெளிப்பாடுகள் என்பன உள்ளுர் வியாபாரத்தை உலகப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்க உதவியாக இருக்கும், இதன்படி உற்பத்திசெய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொண்டு உயரும் உலக வர்த்தகத்தின் நலன்களை அறுவடை செய்ய முடியும்.

ஐந்தாவதாக, ஒரு படித்த வாலிபர் ஒரு வேலைச் சந்தையை விட்டு விலகும்போது, அது மேலதிக வழங்கல்களைக் குறைப்பதுடன் பின்னால் இருப்பவர்களின் வேதனத்தையும் உயாத்துகிறது. மேலும் அது மற்றவர்கள் தொழில் திறமைகளைப் பெற்று வேலைச் சந்தைக்குள் நுழைவதற்கு ஊக்கம் அளிக்கிறது. எனவே ஒரு சந்தையில் இருந்து மற்றொன்றிற்கு தற்போதுள்ள தொழிலாளர்களின் வெளியேற்றம் எப்பொழுதும் அங்கு எஞ்சியிருப்பவர்களின் நலன்களை உயர்த்துகிறது.

மூளைகளின் ஆதாயம்

தங்களது சொந்த நாடுகளைவிட்டு வெளிநாட்டு மண்ணில் குடியேறவதற்காகச் செல்பவர்கள் அந்த சொந்த நாட்டின் புலம் பெயர்ந்தவர்கள் என அழைக்கப் படுகிறார்கள். காலங்கள் செல்லும்போது வெளிநாட்டு மண்ணில் அவர்களின் சொந்த நாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வல்லமை மிக்க சக்திகளாக மாறிவிடுகிறார்கள் அத்துடன் அவர்களது சொந்த நாட்டுக்கு எபபோதாவது வெளி உதவிகள் தேவைப்படும்போது சொந்த நாட்டுக்கு விருப்பத்துடன் உதவி செய்யத் தயாராக உள்ளார்கள். 1990 களில் இந்தியாவின் வெளிநாட்டு இருப்பு மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டு இருப்பைக் கட்டியெழுப்புவதற்காக “இந்திய புத்தெழுச்சி பிணைப் பத்திரங்களை” இந்தியா வெளியிட்டதின் மூலம் இது பெரிதாக விளக்கப்படுகிறது. இந்த பிணைப்பத்திரங்கள் இந்தய புலம்பெயர்ந்தவர்களால் அதிகம் வாங்கப்பட்டன.

இவைகளுக்கு மேலதிகமாக வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் நாட்டில் உள்ள தங்கள் குடும்ப உறப்பினர்களின் பராமரிப்புக்காக ஒழுங்காகப் பணம் அனுப்புகிறார்கள். வெளிநாட்டு நாணயங்களில் அனுப்பப்படும் இந்தப் பணம் சொந்த நாட்டின் அந்நியச் செலாவணியை கணிசமான அளவு உயர்;த்தி அதன் பற்றாக்குறையை சமன்படுத்த உதவுகிறது, குறிப்பாக அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களில் எதிர்பாராத உயர்ச்சி ஏற்படும்போதும் அல்லது அதன் ஏற்றுமதிப் பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்படும்போதும். கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்த எண்ணிக்கையிலான பயனாளிகளில் ஸ்ரீலங்காவும் ஒன்றாகும். அவ்வாறு அனுப்பப்படும் வெளிபநாட்டுப் பணத்தின் பெறுமதி 2008ம் ஆண்டில் கிட்டத்தட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கிட்டவாக இருந்தது. இந்த வருமானம் அந்த ஆண்டின் எண்ணெய் இறக்குமதித் தொகையின் சுமார் முக்கால் பங்கினை சமப்படுத்த உதவியது.

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் பல வறிய நாடுகள் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இதற்கு குறிப்பிடத் தக்க உதாரணம், பங்களாதேஷ்,பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள்.

ஸ்ரீலங்காவின் வரலாற்றில் ஏராளமான சந்தாப்பங்களில் இந்த நாடு வெளிநாட்டுத் தொழில் திறன் மிக்க தொழிலாளர்களை பாரிய நீர்த்தேக்கங்கள், உயரமான கோபுரங்கள், அதி நவீன் நீர்ப்பாசனக் கால்வாய்கள், அழகான நினைவு மண்டபங்கள் மற்றும் கலைவேலைப்பாடுள்ள சிலைகள் போன்றவற்றை கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ளது. இந்த திறமையான பொறியியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கு அந்த நேரத்தில் ஊதியமாக தங்கம் வழங்கப்பட்டது, இது நாட்டில் இருந்து வளங்களின் வெளியேற்றம் நடைபெற்ற ஒரு சந்தர்ப்பம். இருந்தும் ஊதியம் வழங்கப்பட்டது எதனாலென்றால் தேவைகளுடன் ஒப்பிடும்போது அத்தகைய தொழில் திறன்களுக்கான பற்றாக்குறை நாட்டில் நிலவியதால் அந்த வெளிநாட்டவர்களின் சேவை நாட்டுக்கு அவசியமாகத் தேவைப்பட்டது. இன்றைய வழமைப்படி சொல்வதாக இருந்தால் இது ஸ்ரீலங்காவின் மூளை வடிகாலின் நேர்மாறு மற்றும் அந்த கலைஞர்கள் மற்றும் தொழில் நிபுணர்களின் சொந்த நாட்டுக்கு மூளையின் ஆதாயம்.

எனவே வெளிநாட்டில் பணியாற்றும் ஸ்ரீலங்காவாசிகளை தங்கள் அனுபவங்கள், மூலதனம் மற்றும் சிறந்த மேலாண்மை தெரில்நுட்பங்கள் என்பனவற்றுடன் சொந்த நாட்டுக்குத் திரும்பி வரும்படி ஸ்ரீலங்கா ஊக்கப்படுத்த வேண்டும். தற்போதைய பொருளாதார அபிவிருத்தி நிலையில் இத்தகைய திறமைகள் நாட்டில் மிக மோசமாகக் குறைவடைந்துள்ளன. நாடு தனது வளர்ச்சி வீதத்தை உயர்த்தவேண்டிய இலக்கு உலக வங்கி தனது 2018 அவிவிருத்தி மேம்பாட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதின்படி 8 விகிதமாக கணித்துள்ள போதிலும், அடுத்த வரும் மூன்று வருடங்களுக்கு எதிர்பார்த்த வளர்ச்சி 3.5 விகதமாகவே இருக்கப் போகிறது. நாடடை விட்டு முன்தாக வெளியேறியவர்களிடம் இருந்து ஆதாயம் பெறாவிட்டால் இதை உயர்த்த முடியாது. அவர்கள் தங்கள் சம்பாத்தியத்தை ஸ்ரீலங்காவுக்கு அனுப்பினால் அதற்று வரி விலக்கு அளிக்க வேண்டும். அவர்கள் மூலதனத்துடன் நாட்டுக்குத் திரும்பினால், தற்போது வெளிநாட்டவர்களுக்கு கிடைக்கும் வரி விலக்கு உட்பட அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நிதி மந்திரி 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டததை தயாரிக்கும்போது அவர் முக்கியமாக கணக்கிலெடுக்க வேண்டிய விஷயம் இதுதான்.

இதன்படி ஸ்ரீலங்கா அதன் மூளை வடிகாலை மூளை ஆதாயமாக மாற்றுவதற்கு உரிய தருணம் இதுதான்.

(டபிள்யு.ஏ.விஜயவாதனா, ஸ்ரீலங்கா மத்தியவங்கியின் முன்னாள் துணை ஆளுனர் ஆவார்)

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share:

Author: theneeweb