இலங்கை ராணுவம் சமரசத்திற்காக பாடுபடும்’

இலங்கை ராணுவம் சமரச நடவடிக்கைகளுக்காக பாடுபட உறுதிபூண்டுள்ளது என ராணுவ தளபதி மகேஷ் சேனநாயக செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

புத்தாண்டு செய்தியாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதுகுறித்து கூறியுள்ளதாவது:
இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டுப் போரால் பலர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களது பிரச்னைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண்பதே 2019-ஆம் ஆண்டில் இலங்கை ராணுவத்தின் முக்கியமான பணியாக இருக்கும். சமரச நடவடிக்கைகளுக்காக பாடுபட ராணுவம் உறுதிபூண்டுள்ளது.   நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலங்களை சட்டப்பூர்வமான வகையில் அதன் உரிமையாளர்களுக்கு திருப்பியளிக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் உறுதியேற்றுள்ளேன். மேலும், அங்கு நிரந்த அமைதியை எட்டுவதற்கு தேவையான அணைத்து பணிகளையும் மேற்கொள்ள இலங்கை ராணுவம் உறுதியேற்று செயல்படும் என மகேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb