உயிர்த்த ஞாயிறில் உயிர்நீத்தவர்களுக்கு பள்ளியில் துவா பிரார்த்தனை!

 உயிர்த்த ஞாயிறில் உயிர்நீத்தவர்களுக்கு கிளிநொச்சி நகரில் உள்ள பள்ளிவாசலில் துவா பிரார்த்தனை ஒன்று இடம்பெற்றுள்ளது.
 கிளிநொச்சியில் உள்ள ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாசலில்  இராணுவத்தினரின் ஏற்பாட்டில்   கடந்த மாதம் 21ஆம் திகதி குண்டு வெடிப்பில்   இறந்தவர்களுக்காக துவா பிரார்த்தனையும் தொடர்ந்து வழிபாடும்  இடம்பெற்றதையடுத்து நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணம்  தொடர்பான  கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
 இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட  படை முகாம்களின் கட்டளைத்தளபதி  மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய அவர்களின் தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது இதன்போது  கிளிநொச்சி மாவட்ட  இராணுவ அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்
Share:

Author: theneeweb