பிளாஸ்டிக்கை ஏன் தடை செய்ய வேண்டும்

கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள் ஏராளம்

சென்னை:பல எதிர்ப்புகளுக்கு இடையில், பிளாஸ்டிக்கை தமிழக அரசு தடை செய்துள்ளது. ‘ஏன் தடை செய்ய வேண்டும்’ என, பலர் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து, தனியார் அமைப்புகள், துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
அதில் கூறியிருப்பதாவது:

* காலையில் எழுந்து, பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ் முதல், பவுடர், பூசும் கிரீம், குடிக்கும் தேநீரை வடிகட்டும் வடிகட்டி, சாப்பிடும் தட்டு, குடிக்கும் தண்ணீர் பாட்டில், கடைகளில் டீ சாப்பிடும் குவளை, பழச்சாறு, ஐஸ்கிரீம் என, பிளாஸ்டிக்கில் தொடங்கி, பிளாஸ்டிக்கில் ஒரு நாளை முடிக்கிறோம். மொத்தத்தில், நம் வாழ்வுடன், 100 சதவீதம் பிளாஸ்டிக் இணைந்துள்ளது. இதிலிருந்து விடுபடுவது நம் கடமை.
* பல எத்திலின்களின் கூட்டு சேர்மங்களே, பாலி எத்திலின் எனப்படுகிறது. ஆக்சிஜன்,

ஹைட்ரஜன் பயன்படுத்தி பல படிமங்களின் மூலம் பல்வேறு பொருட்களால்உருவாக்கப்படும் பிளாஸ்டிக்கில், இயற்கைக்கு ஊறு விளைவிக்கும், 90 சதவீத நச்சுப் பொருட்கள் உள்ளன.
* பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால், குழந்தைபேறின்மை, நரம்பு தளர்ச்சி, புற்றுநோய், ரத்தம், சிறுநீரகம் உள்ளிட்டவற்றில் எதிர்ப்பு சக்தி குறைகிறது. உயிரணுவில் மாற்றங்கள், ஆண்மை இழப்பு, குடல் புண், என பல கேடுகளை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்டிக் உறைகளால் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட, உணவுப் பொருட்கள் உடலுக்கு ஊறு விளைவிக்கும்.

* வீடுகளில் இருந்து எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், மண்ணின், உயிர் வேதியியல் தன்மையை பாதிக்கிறது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், குளிர்பான பாட்டில் எக்காலத்திலும் அழியாது. சாக்கடை மற்றும் கடல், நீர்நிலைகளில் அடைத்து, நோய் பரவ காரணமாகிறது. மழை நீர் மண்ணுக்குள் ஊடுருவி நிலத்துக்குள் செல்வதற்கும் இடையூறாக உள்ளது.

* அவசரத்துக்காகபயன்படுத்திய பிளாஸ்டிக் இலை, டம்ளர்கள், தற்போது அத்யாவசியமாக மாற்றப்பட்டு விட்டன. பிளாஸ்டிக்கால் உருவாகும் பொருட்கள் அனைத்தும், வேதி முறையில்தயாரிக்கப்பட்டவை என்பதே உண்மை.
* சூடு, குளிர்ந்த பொருட்களை, பிளாஸ்டிக்

Plastic products,Plastic barrier,TN Government, பிளாஸ்டிக், பிளாஸ்டிக் பாதிப்புகள், பிளாஸ்டிக் தடை, தமிழக அரசு , பாலி எத்திலின் , பிளாஸ்டிக் பொருட்கள் , 
Plastic, plastic hazards, Government of Tamil Nadu, poly ethylene, Plastic vulnerabilities,

பொருட்களில் நீண்ட நாட்கள் பயன்படுத்தும் போது, வேதிவினை புரிந்து, நம் உடலில் தேவையற்ற கொடிய வேதிப் பொருட்களை சேர்த்து, பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது.

* நகரத்தில் சேரும் கழிவுகளில், 60 சதவீதம், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள். மண்ணோடு மண்ணாக மக்காமல், நிலத்தின் தன்மையை நஞ்சாக்குகின்றன. இதனால், இயற்கையாக மண் வளத்தை காக்கும், பல பூச்சி இனங்கள் அழிக்கப்படுகின்றன.

* நம் மண்ணில் விழும் கழிவு பொருட்களில், ராட்சத மரம், அதிகபட்சம், 15 ஆண்டுகளில் மட்கி விடும். ஆனால், பிளாஸ்டிக் பொருட்கள், பல ஆயிரம் ஆண்டுகளாகும். எனவே, அரசுடன் சேர்ந்து, மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால், பிளாஸ்டிக்கை ஒழிக்கலாம், வருங்கால சந்ததிகளை காக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb