உயிர்நீத்த உறவுகளுக்கு 10 வது ஆண்டில் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

 

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துதலும் சுடரேற்றி வணங்குதலும் நிகழ்வு இன்று(18) கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வருடந்தோறும் இடம்பெறும் இந்நிகழ்வு இம்முறையும் நடைப்பெற்றது. ஆத்மசாந்தி பிரார்த்தனையும், விசேட பூசை வழபாடுகளும், இறந்த உறவுகளை நினைத்து சுடரேற்றி வணங்குதலும் நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share:

Author: theneeweb