முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு நாள் இன்று……. எனக்குள் வினாக்கள்?????

இது  எத்தையதொரு நாளாக உதிக்க வேண்டும்.?

அரசியல் போரில் மரணித்தவர்களை  நினைவு கூரும் வெறும் துக்கம் கொண்டாடும் நாளா?
அல்லது மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் எழுச்சி நாளா?

பயங்கரவாதத்தை அழித்துநாட்டை ஒன்றுபடுத்திய நாளாக இலங்கை இனவாதம் அதனை சித்தரிக்கின்றது.

எனினும் 2009 இல்பெருவாரியாக உலகளாவியரீதியில் மக்கள் தங்கள் போராட்டசக்தியை வெளிப்படுத்தியிருந்தனர். இதன் பிற்பாடுமக்கள் மத்தியில் எழுந்த கேள்வி எவ்வகையான அரசியல் போராட்டம் இனி தொடரும் என்பதாகும்.

தமிழீழமே மக்களின் நோக்கம் எனில் அதனை பெறும் வழிமுறை என்ன ?

இக்கேள்விக்களுக்கு இன்றுவரை பிரித்தானிய புலம்பெயர் அரசியல் அமைப்புக்கள் தெளிவானபதிலை அல்லது வழியை முன்வைத்தவனா?

பெரும்பான்மை புலம்பெயர்அமைப்புக்கள் சர்வதேசவிசாரணைகளையும்  lobbying அரசியலையும் ஐ.நா Genocide என அறிவிக்கவேண்டும் என்ற பலவருட சட்டநடவடிக்கைகளையும் கடந்து வரவில்லை. Genocide என ஐ.நா அறிவித்தவுடன் நமக்கு தமிழீழம் கிடைத்துவிடுமா?  2016 இல் நடைபெற்ற மியான்மார் ரோகின்சா இனப்படுகொலைகளை  Genocide  என அங்கீகரித்த ஐ.நா, 10 வருடங்களாகியும் ஏன் இன்னும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை Genocide என சுட்டிக் காட்டவில்லை ? இதற்கான பூகோள அரசியல் சூழ்நிலைகளை புரிந்துவைத்துக் கொண்டுள்ளோமா?

முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் மற்றும் இதர தினங்களில் மக்களின் பங்களிப்பும் குறைவடைந்து வருகிறது.

இதற்கான காரணங்கள் என்ன ?

தமிழீழம் என்பதனை நிஜமாக தமிழ்மக்கள் இன்னும் விரும்புகிறார்களா? ஆம்மெனில் நம்பிக்கை இழந்து சலிப்படைந்துவிட்டார்களா? சலிப்படைந்திருந்தால் அதற்கான காரணிகள் என்ன ?

மக்கள் எத்தையதொரு அரசியலை விரும்புகிறார்கள்? அல்லது அமைப்பு ரீதியான அரசியல் தோல்வியைச் சந்தித்துள்ளதா?

விடுதலைப்புலிகளின் வாரிசுகள்தான் நாங்கள் என்றும் பொட்டுஅம்மான் இருந்திருந்தால் இலங்கையில் தற்போதைய தீவிரவாததாக்குதல்கள் நடைபெற்றிருக்காது என்றும் மற்றைய அரசாங்கங்கள் எல்லாம் நம்மை பின்பற்றி அரசியல்செய்யவேண்டும் எனகூவும் அமைப்பு, ஜனநாயகரீதியில் மற்றைய புலம்பெயர்தமிழ்அரசியல அமைப்புக்களோடு அவரவர் கொள்கைகளை முன்வைக்கும் தேர்தலையல்லவா நடத்தவேண்டும்?

உங்கள் வாக்குகளை எதன் அடிப்படையில் ஒப்பிட்டு நீங்கள் வெற்றியீட்டியதாக சொல்கிறீர்கள்?

வழக்கொன்றில் சிக்கிதங்களை முற்றிலும் இழந்த அமைப்பொன்று மறுபடியும் தமது வங்குரோத்து அரசியலை தக்க வைக்க தளம்தேடி திரிகிறது. எவ்வாறு இவர்களால் இதனை செய்யமுடிகிறது ?இதற்கு பலிக்கடாவாவது யார் ? அல்லது ஆனது யார்?

ஆலமரம் போல் வளர்ந்து நிற்கும் இதரஅமைப்புக்கள் என்னவாகியுள்னன?

இதுபற்றி விலாவாரியாக எனதுஅடுத்தபதிவில்.

அரசியல் எழுச்சி ஒன்று தேவை – அது ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்காக ஒங்கி ஒலிக்க வேண்டும். மக்களாகிய நாம் உணர்ச்சி்களை மட்டும் காத்திடாமல் காத்திரமான அரசியல் பற்றி சிந்தித்து பணியாற்றிய வேண்டும்.

இன்னொரு இனம் நம்மைப் போன்று காயப்பட்டு நிற்கிறதா, அங்கு அவர்களுக்காகவும் நம் குரல்கள் அதே வீச்சுடன் ஒலிக்க வேண்டும். ஒரு நிஜமான போராளியின் குணமும் அதுவே.

 

முகநூல் பதிவிலிருந்து

Share:

Author: theneeweb