அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில்…

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை, நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த அவநம்பிக்கை பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான தினம் இதுவரையில் நிர்ணயம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கட்சித் தலைவர் கூட்டம் இடம்பெறவுள்ளது.
அவநம்பிக்கை பிரேரணை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டன் பின்னர், அது ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டு, 5 நாட்களின் பின்னர் விவாதத்திற்கு உட்படுத்த முடியும் என்பது நாடாளுமன்ற சம்பிரதாயமாகும்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் அடங்கிய அவநம்பிக்கை பிரேரணையை ஒன்றிணைந்த எதிரணி நேற்று முன்தினம்  சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்தது.
இந்த அவநம்பிக்கை பிரேரணையில் 66 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒரு தரப்பினரை விடுவிக்குமாறு அழுத்தம் வழங்கியமை, கொழும்பு சினமன்ட் க்ரான்ட் விருந்தகத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட இன்ஷாப் அஹமட் இப்றாஹிம்முக்கு சொந்தமான வெல்லம்பிட்டியில் உள்ள செப்பு தொழிற்சாலைக்கு, விதிமுறைகளுக்கு அப்பற்சென்று கைத்தொழில்துறை அமைச்சின் வெற்று தோட்டாக்களை வழங்கியமை முதலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அத்துடன், அமைச்சரின் சகோதரர்களுள் ஒருவரான ரிப்கான் பதியுதீன், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, மன்னார் காவல்துறை நிலையத்தில் கையளிக்கப்பட்டதன் பின்னர், நீதிமனறில் முன்னிலைப்படுத்தாமல் அழுத்தங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டமை உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுகள், ஒன்றிணைந்த எதிரணியின் அவநம்பிக்கை பிரேரணையில் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share:

Author: theneeweb