புளியங்குளம் வனப்பகுதியில் கைவிடப்பட்ட பையொன்றில் இருந்து கைக்குண்டுகள்

புளியங்குளம் வனப்பகுதியில் கைவிடப்பட்ட பையொன்றில் இருந்து கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

காவற்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

புளியங்குளம் வனப்பகுதியில் புதூர் நாகதம்பிரான் கோவிலுக்கு செல்லும் வீதியின் ஊடாக சந்தேகத்துக்கு இடமாக பயணித்த நபர் ஒருவர் குறித்த தகவல் காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்றது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த நபர் தமது பையை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அவரைத் தேடும் பணிகள் இடம்பெறுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது பையில் இருந்து கைக்குண்டு, துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share:

Author: theneeweb