அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை ஒன்றை முன்வைப்பதற்கு ஜேவிபி தயாராகிறது.

ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 21ம் திகதி கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இதுகுறித்தும் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 21ம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் முன்னதாகவே கிடைக்கப்பெற்றும், அதனை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது.

இது மிகவும் பாரதூரமான விடயம்.

நாட்டில் உள்ள அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறி இருக்கிறது.

இந்த நிலையிலேயே அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணையை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb