வரலாற்றில் அதிகூடிய ஹெரோயினுடன் சிக்கிய பங்களாதேஸ் பிரஜைகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலங்கை வரலாற்றில் அதிக தொகைக் கொண்ட ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட, பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரையும் ஒருவார காலம் தடுப்பில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கல்கிஸை நீதவான் முன்னிலையில், பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு காவற்துறையினருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தெஹிவளையில் உள்ள வீடோன்றில் வைத்து, 3 ஆயிரத்து 336 மில்லியன் ரூபா பெறுமதிக் கொண்ட 278 கிலோகிராம் ஹேரோயின் தொகை மீட்கப்பட்டது.

இதன்போது, அதனுடன் தொடர்புடைய பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிகமாக 75 மில்லியன் ரூபா பெறுமதியான 5 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளும் காவற்துறையினரால் மீட்கப்பட்டது.

Share:

Author: theneeweb