உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது

உயிர்த்த ஞாயிறு தினத்தின்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 69 பேர் குற்றப்பிலனாய்வு திணைக்களத்திலும் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb