சரிந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் – மத்திய வங்கி ஆளுனர் வலியுறுத்தல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் காரணமாக பின்னடைவு ஏற்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தினை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மீண்டும் சமாதானத்திற்கு பங்கம் ஏற்படாத வகையிலான நிலையை ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தினை துரித கதியில் வழமைக்கு கொண்டு வர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தினை வெளிப்படுத்தினார்.

நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக 2019 ஆம் ஆண்டு பாதீடு பாதிப்படைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பெறுமதி சேர் வரி விகிதத்தை குறைத்ததன் மூலம் அரசாங்கத்தின் வருவாய் பாதிப்படைந்துள்ளது.

இருப்பினும், அதிக அந்நிய செலவாணியை பெற்று தரும் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கு இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஸ்திரதன்மையினை பேணுவதற்கு நாட்டு மக்களின் பாதுகாப்பான தன்மை அவசியமாகிறது எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Author: theneeweb