கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற வெசாக் நிகழ்வுகள்

கிளிநொச்சி மாவட்ட இராணுவத்தினர் மற்றும், தேசிய பாரம்பரியங்களை பாதுகாக்கும் மகா சம்மேளனமும் இணைந்து ஒழுங்குசெய்திருந்த வெசாக் நிகழ்வுகள் தர்மபுரம் பொது மைதானத்தில் நேற்று(20) இடம்பெற்றது.

முன்னதாக கிளிநொச்சியிலிருந்து இராணுவ பாதுகாப்புடன் வெசாக் ஊர்வலம் தர்மபுரத்தைச் சென்றடைந்தது. அங்கு புத்த பகவானின் புனித சின்னத்தை கிளிநொச்சி படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய ஏந்திச் சென்று ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் வைத்தனை தொடர்ந்து விசேட பூசை வழிபாடுகள் இஇம்பெற்றன.

அத்தோடு வெசாக் கூடுகள் தானம் வழங்கல் போன்ற செயற்பாடுகளுடன் சித்திரப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு, பரிசல்கள் வழங்குதலும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அருட்தந்தை, அருட் சகோதரிகள் பாடசாலைகளின் அதிபர்கள், இராணுவத்தளபதிகள் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share:

Author: theneeweb