ஸஹ்ரான் உயிரிழந்தமை DNA பரிசோதனையில் உறுதி

உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு, ஷங்கரிலா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹஷீம் என உறுதியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குசேகர கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் இது உறுதியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குசேகர கூறியுள்ளார்.

ஸஹ்ரானின் மனைவி, மகள், சகோதரி ஆகியோரிடம் பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு, மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனையில் இது உறுதியாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Share:

Author: theneeweb