முஸ்லிம் ஆசிரியர்களை மீண்டும் தமிழ் பாடசாலைகளிலேயே இணைக்குமாறு அறிவுறுத்தல்!

ழக்கு மாகாணத்தில் கடந்த தினங்களில் தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றப்பட்ட முஸ்லிம் ஆசிரியர்களை மீண்டும் தமிழ் பாடசாலைகளிலேயே இணைக்குமாறு ஜனாதிபதி கிழக்கு மாகாண ஆளுநரை அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயத்தை தாம் நேரடியாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுச் சென்றதை அடுத்து, ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்திருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் கருத்தை அறிய அவரது தொலைப்பேசிக்கு தொடர்பு கொண்ட போதும், அவர் எமது தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.

Share:

Author: theneeweb