நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் ஜமால்தீன் நௌஷாட்!

ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற செயற்குழு உறுப்பினர் ஜமால்தீன் நௌஷாட் விசாரணைக்காக நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து இவர் கடந்த தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

44 வயதுடைய இவர் நீண்ட காலமாக தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினராக செயற்பட்டு வந்துள்ளதாக காவற்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜமால்தீன் நௌஷாட் 12 வருடமாக நாடாளுமன்றில் பணிபுரிந்து வரும் நிலையில் , கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற தினம் தொடக்கம் பணிக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்துள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயரதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.

அவசர கால சட்ட ஒழுங்கு விதிகளின் கீழ் சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு காவற்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb