உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 344 குடும்பங்கள் பாதிப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களின் குடும்பத்தவர்களையும் வலுவூட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

சமூக பொருளாதார கலாசார ஆன்மீக செயற்பாடுகளை வலுப்படுத்தத் தேவையான அவசியங்களை அரசாங்கம் இனங் கண்டிருக்கிறது. இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளினால் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்களை புனரமைக்கவும், மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 344 ஆகும். இதில் 156 குடும்பங்களில் ஒருவரேனும் மரணம் அல்லது ஏதோ ஒரு பாதிப்பை கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை 188 ஆகும். ஆகக் குறைந்த வகையில் ஒருவர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த குடும்பங்களின் அங்கத்தவர்களின் சமூக பொருளாதார கலாச்சார கல்வி ஆகிய ரீதியில் மறுசீரமைப்பு மற்றும் மீண்டும் மேம்பாட்டுக்காக திட்டமிட்ட வேலைத்திட்டம் கல்வி அமைச்சினால் அடையாளங் காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்த தாக்குதலின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை ஊக்குவிப்பதற்காக கத்தோலிக்க சபையின் சமூக சேவை நிறுவனங்களான செத்சரண நிறுவனத்தின் இணைப்புடன் நகர குடியிருப்பு அதிகார சபையின் மூலம் ஸ்வசக்தி அபிவிருத்தி விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share:

Author: theneeweb